சிறிய கதை தவறாமல் வாசிக்கவும்
எனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்...