வாழ்க்கையின் சிறிய கவிதை
பிறந்தோம்
வாழத்
துன்பப்பட்டு
வாழ்ந்தோம்
மறைந்தோம்
என்பது
இயலாதவர்களின்
வாழ்க்கை
பிறந்தோம்
வாழ வழிதேடி
வாழ்ந்தோம்
மறைந்தோம்
என்பது
சாதாரணமானவர்களின்
வாழ்க்கை
பிறந்தோம்.
வாழ்ந்தோம்
மறைந்தோம்
என்பது
இயன்றவர்களின்
வாழ்க்கை
பிறந்தோம்
சாதித்தோம்
வாழ்ந்தோம்
என்பது
சாதனையாளர்களின்
சரித்திரம்
பிறந்தோம்
வாழ்ந்தோம்
வென்றோம்
என்பது
வெற்றியாளர்களின்
சரித்திரம்
பிறந்தோம்
வாழ்ந்தோம்
பிறருக்கு
கொடுத்தோம்
மறைந்தோம்
என்பது
வள்ளல்களின்
சரித்திரம்
பிறந்தோம்
வாழ்ந்தோம்
வாழவைத்தோம்
என்பது
பண்பாளர்களின்
சரித்திரம்
பிறந்தோம்
வளர்ந்தோம்
வாழ்ந்தோம்
வாழ்வித்தோம்
என்பது
உயர்ந்தவர்களின்
சரித்திரம்
பிறந்தோம்
பிறவியின்
பொருள்
உணர்ந்தோம்
உலகிற்கும்
உணரவைத்தோம்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம்
என்பது
அருளாளர்களின்
சரித்திரம்
பிறந்தோம்
பிறப்பின்
இரகசியம்
அறிந்தோம்
அழியாது
வாழ்கின்றோம்
என்பது
ஞானிகளின்
சரித்திரம்
பிறந்தோம்
முற்றும்
துறந்தோம்
தவமிருந்து
பிறவிப்
பெருங்கடலை
நீந்தி
பிறவாத
கரை சேர்ந்தோம்
என்பது
தவவலிமை
உடையவர்களின்
சரித்திரம்
பிறந்தோம்
தனக்கெனக்
கருதி
பெரும்
பொருள்
சேர்த்தோம்
பின்னர்
அவற்றை
விட்டுச்
சென்றோம்
என்பது
அறியாதவர்களின்
வாழ்க்கை
பிறந்தோம்
பெரும்
துன்பங்கள்
செய்தோம்.
பிறரை அழித்து
வாழ்ந்தோம்
என்பது
மீண்டும்
துன்பத்தை
அடைபவர்கள்
வாழ்க்கை
எல்லோர்
வாழ்க்கையும்
சரித்திரம்
ஆவதில்லை
எல்லோர்
சரித்திரமும்
உலகத்தில்
பேசப்படுவது
இல்லை
பேசப்படும்
சரித்திரங்கள்
யாவும்
பெருமைபட
பேசப்படுவது
இல்லை
அறிவாய் மனமே
இதில் உன் நிலை
எதுவென்று
😌😌😌😌😌😌😌😌😌
எனக்குள்
ஒரு பயணத்தை
நோக்கி
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later