இடுகைகள்

ஜூலை 3, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையான பரிசு _காத்துருக பழகு

*உண்மையான பரிசு!* ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள். “அம்மு... இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை...  நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா. ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்... அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.  அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள்.  பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள். பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு. அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு ந...

உண்மையான சம்பவம் நெஞ்சை உலுக்கும் கதை

உண்மை சம்பவம்? தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்... நேன்று மாலை, குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன். அவர் 80 ரூபாய் என்றார், பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம், அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு... அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா, 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன், அவர் என் கண்களை உற்றுப்பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்குறீங்க என்றார் . நான் ஆமாம் என்றேன்.. அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி ரூ .70 குடுங்க என்றார் . அவர் கண்கள் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்..  அது மனதை என்னவோ செய்ய....  ஏன் அய்யா என்னாச்சு, ஏன் அழறீங்கன்னு கேட்டேன், ஒன்னும் இல்ல சார் என்றார் , நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் . என் பெயர் ஆதம் (77), என் மனைவியின் பெயர் கதீஜா (73 ) எங்களுக்கு 6 குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பம்.. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பிள்ளைகளை ...