சிந்திக்கும் மனிதனுக்கு ஓரு தெளிவுண்டு

 சிந்திக்கும் மனிதனுக்கு 

இதில் ஒரு தெளிவு உண்டு.


ஜெர்மன் நாடு இரண்டாக பிளவுபட்டு இருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்கு மேற்காக பெரிய மதில் சுவர் கட்டி எழுப்பி பிரித்து இருந்தார்கள்.


மனதில் உள்ள குரோத வெறி காரணமாக ஒரு நாள் கிழக்குப் பெர்லின் பகுதியைச் சேர்ந்த சிலர்  ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதிலை தாண்டி மேற்கு பெர்லின் பக்கமாக வீசி  சென்றார்கள்.


இதை அறிந்த மேற்குப் பெர்லின் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிலுக்கு இதே தவறை செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டி வகைகள், பால் பொருட்கள் மளிகை சாமான்கள் என உணவு பொருட்களை கொண்டுபோய் மதில் தாண்டி கிழக்கு பெர்லின் பக்கமாக அழகாக அடுக்கி வைத்து  வந்தார்கள்.


அதேநேரம், அந்தப் பொருட்களின் மேலே இவ்வாறு எழுதி வைத்திருந்தார்கள். "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கின்றதோ அதைத்தான் கொடுப்பார்கள்" (  Each Gives What He Has ) என்று.  இந்த செயலும் இந்த வசனமும் பகைவனை கூட பாசத்தால் இழுக்கும் செயல் அல்லவா!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு