இடுகைகள்

ஏப்ரல் 20, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர்_கவனத்திற்கு

#பெற்றோர்_கவனத்திற்கு 10 வயது மாணவர்கள் கூட இன்று மாரடைப்பால் இறந்து போனதற்கு வைத்தியர் கூறிய காரணம். (1) காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்)                   (2) காலை உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்புதல். (3) குழந்தையின் எடையை விட பள்ளி புத்தக பையை எடுத்து செல்லுதல். (4) வீட்டு வேலைகளை (Homework) முடிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் அழுத்தம். (5) அதிகமாக குளிர்பானம் குளிர் பக்கட் சாப்பிடுவது. (6) பாடசாலை விட்டு வந்து உடனே குளிப்பது, சாப்பிடுவது, பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிகமாக ஓடுவது.... 7) வீட்டில் வீட்டு வேலைகளை முடிக்க அழுத்தம் கொடுப்பது அல்லது அவர்களை அதிகமான நேரம் திட்டிய வண்ணம் இருப்பது. நாம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புள்ள பெற்றோர்களே!    அப்பாவி குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள், விளையாடுவதற்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுங்கள்.

ஒருவர் ஒருவரை மதித்து வாழவேண்டும்

இளம் வயது மாது ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.  அடுத்த நிறுத்தத்தில் பருமனான மாது ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது மாதின் பக்கத்தில் அமர்ந்தார்.  அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் மாதினை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் மாதிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.  உடனே அந்த இளம் மாதிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார். அம்மாது புன்னகைத்தவாறு கூறினார்: "நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான்.  எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.  நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார். அம்மாதின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை! "அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே" இங்கு நாம் வாழப்போகும்  காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,   வாய்ச்சண்டை ப...

பணியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.  பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வ...

எமது பிள்ளைகள் திறமை

எமது பிள்ளைகள் ........................... பிள்ளைகளை வெறுமனே ஆசிரியர்களிடம் அல்லது பாடசாலையிடம் ஒப்படைத்துவிட்டு இருந்துவிடாமல் அவர்களின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் நலமான மாற்றம் ஏற்படுவதற்கு உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருக்கே இருக்கின்றது.  அதற்கான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகின்றோம்.   ♦️அடிக்கடி பிள்ளையுடன் உரையாடுங்கள்  ♦️பிள்ளை ஒருவிடயத்தை பார்க்கும் விதம் பெற்றோர் பார்க்கும் விதத்தைவிட மிகவும் வித்தியாசமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள் ♦️குறைந்தது ஒரு நாளில் 30 நிமிடங்களையாவது பிள்ளையுடன் வாசிக்க வாசித்துக்காட்ட செலவிடுங்கள்  ♦️புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்ற வாசிப்பு சாதனங்களை வீட்டில் உபயோகத்திற்கு வைக்கவும்  ♦️பாடசாலைக்கும் வீட்டிற்கும் இடையிலான உறவையும் நெருக்கத்தையும் எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவு படுத்துங்கள்  ♦️பாடசாலை தொடர்பான விடயங்களில் நீங்கள் அக்கறையாக இருப்பதை பிள்ளைக்கு உணரவிடுங்கள்   ♦️பிள்ளையின் புத்தகங்களை ஒவ்வொரு நாளும் பார்ப்பதை பிள்ளைக்கு தெரியவிடுங்கள்.   ♦️பாடசாலையில் நடைபெறும் விடயங...