மனநிறை வோடு வாழ வேண்டும்
*உம் கணவர் நூறு ரூபாய் சம்பாதித்தாலும் மன நிறைவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்*
சகோதரிகளே.....
ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கி கட்டாயம் வாசியுங்கள்
"என்ன நம்ம கணவருக்கு மாதம் 15000 தான் சம்பளமா இதை வைத்து என்ன செய்யுறது"
ஆம் இதுபோல் சிந்தித்து கவலைக் கொள்ளும் பெண்கள் சிலர் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் 😔
தன் கணவன் செய்யும் வேளையில் அவர் வாங்கும் சம்பளத்தில் தான் சில பெண்களுக்கு கவுரவம் இருக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
உங்கள் கணவர் ஹராமான வேளை செய்து தவறான வழியில் சம்பாதித்தால் நீங்கள் கவலை கொள்வதில் அர்த்தமுன்டு ஆனால் அவர் ஹலாலான முறையில் சம்பாதித்து அவரால் முடிந்த வருமானத்தை கொடுத்தால் அதைக் கொண்டு நீங்கள் திருப்தி அடையுங்கள்.
" ஒரு பெண் எவ்வளவு சிரமப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கிறாள் என்பது அனைவருக்கும் தெரியும், பிரசவம் என்பது மறுபிறவி என்பது போல் இருக்கும் என்றெல்லாம் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்", ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எத்தகைய கஷ்டமானதோ அதே போன்று தான் ஒரு ஆண் தன் குடும்பத்தை வழி நடத்த உழைப்பதும் கஷ்டமானது...
தாய், தந்தை, மனைவி என்று இருக்கும் போது இருந்த ஆணின் உழைப்பு பிள்ளைகள் என்று உறவு வந்தவுடன் இன்னும் அதிகமாகிறது..
8 மணி நேர வேளை 12 மணி நேரம் ஆகிறது
விடுமுறை நாட்களிலும் அவன் பணத்தை தேடி அலைகிறான்.
காரணம் : தன் குடும்பம், தன் மனைவி, தன் பிள்ளைகள் எல்லாரும் நிம்மதியாக பசியில்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான்.
தன் குடும்பத்தை வெளியில் கூட்டிச் சென்று விதவிதமாக ஓட்டலில் சாப்பிடும் ஆண்கள், தனிமையில் இருக்கும் போது ஒரு டி குடிக்க கூட யோசிப்பார்கள்... இதில் வெளியூர் சென்று வேளை செய்யும் ஆண்களின் நிலை ரொம்ப மோசம், வீட்டில் 8, 10 இட்லி சாப்பிடுவார்கள் ஆனால் வெளியூரில் 4 இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது காரணம் பசி இல்லை என்பது அல்ல சேர்த்து வைக்கனும் குடும்பத்திற்க்கு கொடுக்க வேண்டும் என்பதால் தான் 😒
சிலர் நினைப்பாங்க "நால்லா படிச்சவங்க மாதம 60000 சம்பாதிக்கிறாங்க, படிக்காதவங்க 15000 சம்பாதிக்கிறாங்க".
குறைவாக சம்பாதிப்பதும் அதிகமாக சம்பாதிப்பதும் அவரவர் விரும்பமோ சக்தியோ அல்ல அது அல்லாஹ் நிர்ணயித்த ரிஜ்க், அதில் யாரும் அதிகமோ குறைவோ செய்துவிட முடியாது.
படிச்சவங்க தான் அதிகம் சம்பாதிப்பாங்க படிக்காதவங்க குறைவா சம்பாதிப்பாங்க என்பதெல்லாம் கிடையாது, அல்லாஹ் நாடியதை அவரவருக்கு கொடுப்பான்..
அல்லாஹ் சொன்னதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் "இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் இன்றி வேறில்லை, இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அழியக்கூடியதே"
அதற்காக இந்த உலகத்தில் வாழ கூடாது என்று அர்த்தமல்ல மாறாக இருப்பதை கொண்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள் 🙂
பதவி, பணத்தை வைத்துத்தான் கவுரவம் சந்தோஷம் என்று நினைத்தால் உங்கள் ஈமான் இன்னும் முழுமை அடையவில்லை என்று தான் அர்த்தம்.
தன் கணவன் 5 நேரம் தொழுகிறார், தன்னால் முடிந்ததை சதகா செய்கிறார், ஹலாலான முறையில் சம்பாதிக்கின்றார் என்று எந்த பெண் திருப்தி கொள்கிறாளோ அவளே சிறந்தவள்....
அல்ஹம்துலில்லாஹ் 🙂
திருமணமான பெண்கள் உணர்ந்து கொள்ளவும், திருமணமாகாத பெண்கள் படிப்பினை பெறவும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்....
இந்த பதிவில் ஏதேனும் தவறுகள் இருந்தால் என்னை மட்டுமே சாறும்.
பதிவை அதிகமாக பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later