கணு மெல் இருக்கும் ஆமை
கணு மேல் இருக்கும் ஆமை!
ஒரு ஏழை விவசாயியின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார் ஒரு டாக்டர். அப்போது இருவருக்குமிடையில் உரையாடலொன்று தொடங்கியது.
இறுதியில் அரசியல்வாதிகளைப்
பற்றியும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பற்றியும் உரையாடல் உருவானது.
அப்போது அந்த ஏழை விவசாயி இவ்வாறு சொன்னார்.
"என்னைப்பொறுத்தவரை கணு மேல் இருக்கும் ஆமை போல்தான் பெரும்பாலான அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்."
'கணுமேல் இருக்கும் ஆமை' என்பது என்ன என்று டாக்டருக்கு புரியவில்லை. அந்த ஏழை விவசாயியிடம் விளக்கம் கேட்டார்.
இவ்வாறு பதில் கிடைத்தது:
"நாட்டுப்புற சாலைகளில் நீங்கள் பிரயாணம் செய்யும் போது சில வேளைகளில் வேலிக் கணுக்களின் மேல் ஆமை ஒன்று இருப்பதை கண்டிருப்பீர்கள். அதனைத்தான் கணு மேல் இருக்கும் ஆமை என்றேன்".
இப்போதும் கூட டாக்டருக்குப் புரியவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது. அதனை அவதானித்த விவசாயி மீண்டும் தொடர்ந்தார்.
" உயரமான அந்தக் கணுவின் மேல் அந்த ஆமை தானாக ஏறி உட்காரவில்லை என்பது உங்களுக்கு தெரியும். அதுபோல ஆமை அந்தளவு உயரத்தில் இருக்கவேண்டிய ஒன்றுமல்ல என்பதும் தெரியும். தன்னால் இயங்கமுடியாத உயரத்திற்கு அது உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் தெரியும். அந்த உயரத்தில் இருக்கும்போது தான் என்ன செய்யவேண்டும் என்பதும் அந்த ஆமைக்குத் தெரியாது. அதுபோல ஒன்றுக்கும் பிரயோசனமற்ற அந்த உயரத்தில் அந்த ஆமையை தூக்கி வைத்த அந்த 'முட்டாள் யார்' என்றும் நீங்கள் யோசிப்பீர்கள்"
இப்போது டாக்டருக்கு புரிந்தது...ஏன் ஏராளமான அரசியல்வாதிகள் 'கணு மேல்' இருக்கும் ஆமை போலவே இருக்கிறார்கள் என்பது..!
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later