இடுகைகள்

ஏப்ரல் 23, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஷ்டதின் கதை

⏩ 😥 கஷ்டம், 😥 கஷ்டம், 😥 கஷ்டத்துக்கு மேல் 😭 கஷ்டம், தாங்க முடியலே..⏪ ⏩ எதுக்குத் தான்பா இந்த 😥 கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. ⏪ . 👉 இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.👈💐  . 👉 பாலுக்கு ஏற்பட்ட 😫 வருத்தம்.!👈 . 👉 பாலுக்கு ஒரு பெரிய வருத்தம் இருந்தது..! . ⏩ பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.  ⏩ என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.  ⏩ அடுப்பைப் பற்றவைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.  ⏩ எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.  ⏩ பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰 என்று என்னை நானே நொந்து கொண்டேன்.  . ⏩ பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐 ⏩ நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐 . ⏩ இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰 . ⏩ அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰 கவலைப்படவில்லை.  . ⏩ திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்..😥 . ⏩ எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்....

பிள்ளைகளை திணிக்காதீர்கள்

இம்முறை சாதாரண தரம் எழுதிவிட்டு உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான ஒரு திறந்த மடல். இது அனேகமானவர்களால் அடித்து துவைக்கப்பட்ட ஒரு விடயம் என்றாலும் திரும்பவும் ஒரு ஞாபகமூட்டலுக்காக இந்த விடயத்தை பதிவிட நினைக்கின்றேன்.  பெற்றோர்களுக்கு: 1. உங்களிடம் நான் கெஞ்சி கேட்பது, உங்களது பெருமைக்காகவும், பெயர் புகழுக்காகவும் அநியாயமாக உமது பிள்ளைகள் மீது உங்களுக்கு பிடித்த துறையினை திணிக்க வேண்டாம்.  2. கெட்டிக்கார பிள்ளைகள் அனைவரும் Bio மற்றும் Maths தான் படிக்க வேண்டும் என்று இல்லை, அல்லது சாதாரண தரத்தில் சற்று குறைவான அடைவினை அடைந்த பிள்ளைகள் Bio அல்லது Maths படிக்கக் கூடாதென்றும் இல்லை. பெரும்பாலானவர்களுக்கு தெரியும், சாதாரண தரம் என்பது வெறுமனே உயர் தரத்திற்கான ஒரு நுழைவுச்சீட்டே அன்றி அதில் பெரும் சித்தி, எந்த வகையிலும் உயர்தரத்தினை பாதிக்கப் போவதில்லை என்று.  3. தயவுசெய்து உமது பிள்ளைகளின் உணர்வுகளுக்கும், அவர்களது கனவுகளுக்கும் மதிப்பளியுங்கள் அதனை ஊக்கப்படுத்துங்கள். முட்டாள்தனமாக எனது ஆசை, எனது கனவு என்று உங்களது ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது...

வாழ்கை வாழ்வதற்கு தான்

 வாடகைக்கு இருக்குற வீட்டுக்கு வரும் சொந்தங்களும் நண்பர்களும் " வீடு நல்லாருக்கு , இந்த வீட்டையே வாங்கிட வேண்டியது தானே "" என்பார்கள்  நான் ஏன் வீடு வாங்க மாட்டேன் என்பதற்கான காரணங்கள்  1. இப்போ இருக்கும் duplex வீடு , ஹோம் ஜிம் கார் பார்க்கிங் , தனி வீடு , பள்ளிக்கு அருகில் ,நிறைய இடம் என்று சூப்பரா இருக்கு  நான் கொடுக்கும் வாடகை 15,000 ஆனால் வீட்டின் விலை 75 லட்சம்  அவ்வளவு தொகை என்னிடம் இல்லை  2. Emi ல தான் வாங்கணும்  3. அடுத்த 20 வருஷத்துக்கு மாதம் 60 k டு 70k கட்டணும்  4. அந்த emi கட்டுற காசுல , வயது இருக்கும் போதே பொண்டாட்டியோட 10 வெளிநாட்டு டூர் போகலாம்  இல்லைனா மாதம் மாதம் நகை வாங்கலாம்  60 k ல எவ்வளவோ அனுபவிக்கலாம்  5. இன்னும் 11 வருஷத்துல என் பொண்ணு காலேஜ் போயுடுவா ,  அதுக்கு அப்பறம் இந்த ஏரியா , பெரிய வீடு ரெண்டுமே தேவையில்லை  6. 33 வயசுல வீடு வாங்குன , நான் retire ஆகும் போது வீடும் retire ஆகி இருக்கும் , அதுக்கு அப்பறம் எங்க போறது  7. முக்கியமான விஷயம் , அடுத்த 20 வருஷமும் பேங்க் காரன் மெசேஜ் கால் பண்ண...

இது தான் உலகமா, வாழ்கைய???

இதுதான் உலகமா?  இதுதான் வாழ்க்கையா? ஒரு குட்டி கதை. ஒரு கிராமத்தின் ஏரிக்கரையில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டு இருந்தான்.  அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல்.  ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.  ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.  முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .  ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,  “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.  சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவ...