இடுகைகள்

ஜூன் 2, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள். புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள். புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள். புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை ...