இடுகைகள்

ஜூலை 6, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் இன்றைய வாழ்க்கைநிலை

🎈ஒரு குட்டி கதை..... ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்* நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன  வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன* அங்கும் சில புறாக்கள் இருந்தன  அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின. சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்* வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும்  அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன . வழியில் ஒரு *மசூதியை கண்டது*  அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு  இந்த புறாக்களும் குடியேறின  சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது  வழக்கம் போல்  இடம் தேடி பறந்தன. இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் ஒரு பெறிய மரத்தில் குடியேறின... *கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.* ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது  "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?" என்று... அதற்கு அந்த தாய் புறா சொன்னது  "நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தா...

வேலை செய்யும் போது பலன் எதிர் பார்க்காதே

*💗சிந்தனை கதை...* *நம் வாழ்க்கையை நாம் தான் நிர்மாணிக்கிறோம்..!!* ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோ தானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வுபெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் aaஎன்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு! வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களு...