வலிமை மிகுந்த நெஞ்சை உலுக்கும் கதை
இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் !
மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதிற்கில்லை என்பதால், அந்த மருத்துவரே மதுரைக்கு கொண்டு செல்ல கூறினார். மதுரையின் பிரபல தனியார் மருத்துவமனையில் இதை பற்றி நான் வினவ, patient ஐ அழைத்து வருமாறு கூறினார்கள். Icu வில் பெட் இருப்பதாகவும் அட்மிட் செய்து கொள்கிறோம் என்று கூற என் மாமா ஆம்புலன்ஸில் அங்கே அழைத்து வர பட்டார்கள். ஆனால் வந்ததும் இவ்வளவு நேரம் பெட் இருந்தது இப்போது இல்லை என்றனர். (சிபாரிசு செய்யப்பட்ட யாருக்கோ பெட் சென்றுவிட்டது ) Patient கண்டிஷன் மோசமாக உள்ளதால் நாங்கள் ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர். Patient conditions பற்றி முழுமையாக நான் கூறிய போது முதலில் ஒப்புக்கொண்டீர்களே என்ற என் வாதம் எடுபடவில்லை. நள்ளிரவு நேரம் அது. வேற எந்த ஒரு தனியார் மருத்துவ மணியில் விசாரித்த போதும் எங்கும் இடமில்லை என்று கை விரித்தார்கள். Patient ஐ பார்க்கும் முன்னே, 6லட்சம், 8லட்சம் என்று முதலில் ஹாஸ்பிடல்லில் டெபாசிட் செய்தால் மட்டுமே அட்மிஷன் என்ற வாக்கியம் மதுரையின் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஒலித்தது. அரசு மருத்துவமனையில் கொரோன ICU வில் பணியாற்றும் எனக்கு தெரியும் ICU வில் இடமில்லை என்று! காரணம் அத்துணை patients இருக்கிறார்கள் GH இல். சரி வேறு வழியில்லை என்ற பட்சத்தில், கஷ்டப்பட்டு என் சீனியர் மருத்துவர்கள் செய்த உதவியில், ராஜாஜி அரசு மருத்துவமனை GH இல் icu வில் அட்மிட் செய்தோம். அதே ICU வில் தான் நான் டூட்டியில் இருக்கிறேன். இரவு முழுவதும் CPAP எனப்படும் வெண்டிலேட்டர் மோடில் வைத்திருந்தோம். ஆரம்பம் தொட்டு சிறிது மோசமாக இருந்தாலும் oxygen அளவு 90% தொட்டு கொண்டு தான் இருந்தது. ஒரு நிமிடம் விலகாமல் நான் உடனே இருந்தேன். Dexamethasone, enoxaparin, remdisevir, lasix, piptaz, ranitidine, hydrocort, Insulin, iv fluids, deriphylline endru நொடிக்கொரு தேவையான இன்ஜெக்ஷன் போட்டும், BP, oxygen status, SUGAR(cbg) என்று மானிட்டர் செய்து கொண்டே இருந்தேன். இரவு இப்படி கடக்க காலை 7 மணி அளவில் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டார், oxygen அளவும் படிப்படியாக குறைந்து 43% ஆக மாறியது, உயிர் காக்கும் மருந்துகளான adrenaline atropine ஆகியவற்றை போட்டு, CPR குடுக்க ஆரம்பித்தேன். மாமாவின் கொரோனா ரிப்போர்ட் வந்திருக்கவில்லை, CT Report உம் வந்திருக்கவில்லை. CT படத்தை பார்த்தே நுரையீரல் பாதிப்பு அதிகம் என்று ஊகித்திருந்தேன். அந்த இடத்தில் intubate செய்வதற்கோ, வெண்டிலேட்டர்க்கோ வசதியோ வாய்ப்போ இருக்கவில்லை. என் கண் முன்னே என் மாமாவின் உயிர் பிரிந்தது. இறக்கும் தருவாயில் கூட நான் இருக்கிறேன் காப்பாற்றி விடுவேன் என்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். என் double mask, face shield, googles தாண்டியும் என் கண்களைத்தான் பார்த்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு மருத்துவனாக நான் கொரோனவிடம் தோற்றேன். என் தாய் மாமாவை கொண்டு சென்று விட்டது. நொடிப்பொழுதில் உலகமே மாறிவிட்டது. நான் இங்கே யாரையும் குறை கூற விரும்புவதை விட, கொரோன என்னிடம் கூறியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன்!
காய்ச்சல், இருமல், அசதி, சுவை வாசனை தெரியாமல் இருத்தல் போன்ற எந்த ஒரு அறிகுறியையும் அலட்சியம் செய்யாமல் முதல் நாளே மருத்துவரை நாடுங்கள்.
Covid swab test ஐ விட CT CHEST தான் மிக முக்கியம் என்று உணருங்கள்.
ராஜபாளையம் போன்ற town களில் sick ஆக இருக்கும் கேஸ் களை கவனிக்க ஒரு மருத்துவமனை கூட இல்லை என்பதால் அரசு இதில் தலையிட்டு இது போன்று சிறு நகரங்களிலும் sick cases ஐ பார்க்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்!
தமிழகத்தில் இருக்கும் வென்டிலேட்டர்களை வைத்துக்கொண்டு நாம் புரியும் போர் முற்றிலும் வீண்!
எனக்கு கொரோனா இருக்காது என்று நீங்களாக எந்த ஒரு சுய நம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
மதுரையில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வியாபார பொருள் ஆகிவிட்டது. அட்மிஷன் போதே 6, 7லட்சம் என்றால் சாமானிய நடுத்தர வர்கம் எங்கே செல்வார்கள்??
ராஜாஜியில் இடமில்லையா என்றால், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மதுரை மருத்துவக் கல்லூரியை நாடும் போது இங்கே இருக்கும் மருத்துவர்கள் எத்தனை கேஸ் களை பார்க்க முடியும்?
எங்கும் தலை விரித்தாடும் கொரோனவை சாதாரணமாக எண்ணாதீர்கள் ! வயதானவர்களையும், bp, sugar என்று வியாதி இருப்பவர்களுக்கும் மரணம் நிச்சயம். அதனால் வயதானவர்களை பார்த்துக்கொள்ளுங்கள்...
கொரோன விளையாட்டல்ல... போதும் 🙏
தனி மனித இடைவேளி, mask, sanitizer, போன்றவற்றை கடைபிடியுங்கள்.
இன்று எங்கள் குடும்பம் வாடும் நிலை உங்களுக்கும் வர வேண்டாம் என்று சொல்கிறேன்.
சிறிது அறிகுறி என்றாலும் மருத்துவரை நாடுங்கள் .
பணத்தாசை பிடித்து வியாபாரம் செய்யும் தனியார் மருத்துவமனை management களை மொத்தமாக புறக்கணிக்க வேண்டிய நேரமிது.
மருத்துவர்களிடம் நான் வேண்டுவது, உங்கள் குடும்ப நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்.
கண் விழித்து எத்தனையோ கொரோன நோயாளிகளை காப்பாற்றிய என்னால் என் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை.
சொந்த தாய் மாமாவிற்கு CPR குடுத்து, death summary எழுதும் நிலை வேறு எந்த ஒரு மருத்துவருக்கும் வர வேண்டாம் 🙏
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later