குடும்ப உழவுகள்
*குடும்ப உறவுகள்*
தாத்தா என்றொரு உறவு
தாளாத பெருமையை தரும்
பாட்டி என்றொரு உறவு
பாசத்தை மிகையாய் கொட்டும்
அம்மா என்றொரு உறவு
அன்பை மட்டுமே காட்டும்
அப்பா என்றொரு உறவு
அகிலத்தை நமக்குச் சொல்லும்
அண்ணன் என்றொரு உறவு
அனைத்தையும் கொடுத்து உதவும்
அக்காள் என்றொரு உறவு
அம்மா போல் நின்று வழிநடத்தும்
தம்பி என்றொரு உறவு
தனக்காக எதுவும் செய்யும்
மாமா என்றொரு உறவு
மாட்சிமை பெற்று தரும்
அத்தை என்றொரு உறவு
அத்தனை அன்பை கொடுக்கும்
இப்போது கூட்டு குடும்பம்
இல்லையே - மனம் புழுங்கி
தனியாய் கிடந்து தவிக்கிறோம்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later