இடுகைகள்

ஜூலை 9, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

#எப்போதும்_ஜெயிக்க_சில_டிப்ஸ்_! 1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள். 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும். 11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள். 12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்க...

மீன் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்

உணவுகள் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நம்பமுடியாத 12 நன்மைகள் ! அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம்பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் அது மீன் என்றே சொல்லலாம். அத்தகைய மீன்களில் உள்ள மருத்துவ குணங்களை பட்டியலிட்டுள்ளனர் மீன் உணவு ஆராய்சியாளர்கள். அதை இங்கே முழுமையாக பார்ப்போம். 1.மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்க வழிசெய்கிறது. 2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது. 3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகைசெய்கிறது. 4.மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங் கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்...

கொரோனா வின் சிறிய கதை

கொரோனா எனும் பெயரில்  சமூகம் செய்யும் உளவியல் தாக்குதல்கள் கொரோனா தொற்றுக்குள்ளான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை "அந்த நோய் நம் உடலுக்கும் உயிருக்கும் செய்யும் ஊறு" சம்பந்தப்பட்டதன்று மாறாக அந்த நோய் உண்டாக்கும் உளவியல் தாக்கமே சமூகத்தில் பெரியதாக இருக்கிறது. நான் தினமும் சந்தித்து வரும் சில கதைகளின் வரிகள் இதோ "தம்பி.. உனக்கு தொண்டை வலி இருக்குனு சொல்ற..உடம்பு வலி இருக்குனு சொல்ற.. பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு போய் ஒரு டெஸ்ட் கொடுத்துறேன்.. கொரோனாவானு தெரிஞ்சுக்குவோம்" "ஐயோ.. டெஸ்ட் வேணாம்ணே.. கொரோனானு தெரிஞ்சா...என் கல்யாணம் நின்னுபோகும்.  அடுத்த மாசம் கல்யாணம் அண்ணே. ரொம்ப கஷ்டப்பட்டு கல்யாணம் பண்றேன்னே..தயவு செய்து டெஸ்ட் வேண்டாம்"  அடுத்த கதை  "சும்மா தொண்டை வலினு வந்த எனக்கு டெஸ்ட் எடுத்து பாசிடிவ்னு சொல்லிட்டீங்க..என்ன தனிமைப்படுத்தவும் போறீங்க.. என் வீட்ல நான் , என் மனைவி, நாலு வயது பிள்ளை இருக்கு. அதுங்க ரெண்டுக்கும் நெகடிவ் வந்துடுச்சு.. நான் ஒரு கம்பெனில வாட்ச்மேனா இருக்கேன். என் கம்பெனில இருந்து என்னை வேலைல இருந்து தூக்கிடுவாங்க....

மருத்துவர்கள் ஏன் நாக்கு பார்க்கிறார்கள் தெரியுமா ?

மருத்துவர் முதலில் நமது #நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ... 👅 😛 👅  உடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின்வரும் சிலவும் அதற்கு முக்கிய காரணம். அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம். #சிவப்பு நிற நாக்கு...👅  உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. #மஞ்சள் நிற நாக்கு...👅  நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம். #பிங்க் நிற நாக்கு...👅  உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம். #இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு...👅  இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது. #வெள்ளை நிற நாக்கு...👅  ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் ...