இடுகைகள்

ஆகஸ்ட் 14, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலிமை மிகுந்த நெஞ்சை உலுக்கும் கதை

இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் ! மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதிற்கில்லை என்பதால், அந்த மருத்துவரே மதுரைக்கு கொண்டு செல்ல கூறினார். மதுரையின் பிரபல தனியார்  மருத்துவமனையில்  இதை பற்றி நான் வினவ, patient ஐ அழைத்து வருமாறு கூறினார்கள். Icu வில் பெட் இருப்பதாகவும் அட்மிட் செய்து கொள்கிறோம் என்று கூற என் மாமா ஆம்புலன்ஸில் அங்கே அழைத்து வர பட்டார்கள்.  ஆனால் வந்ததும் இவ்வளவு நேரம் பெட் ...

அன்பை உணரதவர்கள் சிறுகதையை வாசிக்கவும்

அன்பை உணராதவர்கள் இக்குட்டிக்கதையை வாசித்துச் சாகட்டும்! ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது.  அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான். இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன். “பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒர...

சிறந்த சிறுகதை

 சிறந்த சிறுகதை :  வாசித்துத்தான் பாருங்களேன்! “#உனக்கு_தகுதி_இல்லாத_இடத்தில்_நீ_இருக்காதே”     ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன்மகனை அழைத்து சொன்னார் , " மகனே , இது உனது பூட்டனின் கைக்கடிகாரம் , 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது , நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , இது பழையது என்பதால் 1000 ரூபா மட்டுமே தர முடியும் என்கின்றனர் , என்றான் .      தந்தை பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு , தந்தையிடம் இதற்கு 5000 ம் ரூபாதான் தர முடியும் என்கின்றனர் என்றான் .      தந்தை ‘இதனை நூதனசாலைக்கு ( Museum ) கொண்டு சென்று விலையை கேட்டுப்பார்’ என்றார் ... அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , நான் அங்கு போன போது , அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து , பரிசோதித்துவிட்டு , என்னிடம் இதற்கான பெறுமதி நூறு மில்லியன் என்கின்றனர் என்றான் .....

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள்

 வெகுமானம் வாங்கி வாக்களிக்க முன் சில வரிகள்... 1. உங்களுக்கு ஏதோ ஒரு சன்மாத்தையோ, பொருளையோ, வாக்குறுதியையோ தேர்தல் காலங்களில் தந்து விட்டு வாக்கை வாங்குவோர். ஆட்சியில் அமர்ந்த பின் அவர்கள் உளதூய்மையுடன் மக்கள் சேவையாற்றுவார்கள் என்று எதைவைத்து நம்புகிறீர்கள். 2.உங்களிடம் இருந்து ஒரு வாக்கை பெற்றுவவதற்க்கு, இவ்வளவு  செலவு செய்பவர்கள், அதிகாரத்தில் அமர்ந்த பின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்ப்பார்களா? உங்களுக்கு சேவையாற்ற விரும்புவார்களா? 3.தேர்தல் காலங்களில் சன்மானமாக வேட்பாளர்களிடம் இருந்து பெறும் உதவிகள் நம்மை எவ்வளவு காலம் வாழ வைக்கும்.  4.ஒரு வாக்குக்காக நமக்கு 1000மோ 5000மோ லஞ்சமாக தந்து வாக்கை வாங்குகிற இவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின் எவ்வளவு நம்மிடம் இருந்து சுரண்டுவார்ள், என்பதை சிந்திப்போமாக!! 5.வாக்குரிமை என்பது போராட்டங்களும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டபின் மக்களுக்களுக்கு கிடைத்த உரிமை . அதை அற்பமான விடயங்களுக்காக விற்க்கலாமா? 6. இவ்வாறு எதையோ தந்துட்டு நம் வாக்குரிமையை கேட்கின்ற இவர்கள். பிற்காலங்களில் நமக்கு ஏதேனும் நலவு செய்வார்கள் என்று எ...

சிந்திக்கும் மனிதனுக்கு ஓரு தெளிவுண்டு

 சிந்திக்கும் மனிதனுக்கு  இதில் ஒரு தெளிவு உண்டு. ஜெர்மன் நாடு இரண்டாக பிளவுபட்டு இருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்கு மேற்காக பெரிய மதில் சுவர் கட்டி எழுப்பி பிரித்து இருந்தார்கள். மனதில் உள்ள குரோத வெறி காரணமாக ஒரு நாள் கிழக்குப் பெர்லின் பகுதியைச் சேர்ந்த சிலர்  ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதிலை தாண்டி மேற்கு பெர்லின் பக்கமாக வீசி  சென்றார்கள். இதை அறிந்த மேற்குப் பெர்லின் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிலுக்கு இதே தவறை செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டி வகைகள், பால் பொருட்கள் மளிகை சாமான்கள் என உணவு பொருட்களை கொண்டுபோய் மதில் தாண்டி கிழக்கு பெர்லின் பக்கமாக அழகாக அடுக்கி வைத்து  வந்தார்கள். அதேநேரம், அந்தப் பொருட்களின் மேலே இவ்வாறு எழுதி வைத்திருந்தார்கள். "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கின்றதோ அதைத்தான் கொடுப்பார்கள்" (  Each Gives What He Has ) என்று.  இந்த செயலும் இந்த வசனமும் பகைவனை கூட பாசத்தால் இழுக்கும் செயல் அல்லவா!  

நேர்மையின் சிறுகதை

*சிறுகதை - நேர்மை.*                            உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார். ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?” ”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!” “ரொம்ப கம்மியா யிருக்கே!” ”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!” ” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?” “நமக்கெதுக்குங்க அதெல்லாம்?” “230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!” ”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!” ”சரி...