இடுகைகள்

டிசம்பர் 18, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்

*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், யாரெல்லாம் நம்மிடமிருந்து விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.!* *அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் இதை முடிவு செய்கிறது.* *வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.* *யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.* *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.!* *வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்...*   *தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* *பணம் இருந்தால் அவனை உயர்ந்தவனாக கருதும் இவ்வுலகம்   குணம் இருந்தாலும் பணமில்லை என்ற காரணத்தால் அவனை குப்பையாகவே அடையாளம் காண்கிறது.*      *நடிப்பவனை நல்லவனாகவும்   உண்மை பேசுபவனை பைத்தியக் காரனாகவும்   அன்பு காட்டுபவனை ஏமாளியாகவும் சித்தரிக்கும் இவ்வுலகம் இப்பேருண்மையை   எடுத்துச் சொல்பவனை மட்டும் கோமாளியாகவும் பார்க்க தவறுவதில்லை..!* *இறைவன் தனக்குப் பிடித்தவர்க...

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!! குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...  குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட்  ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்...

மனநலம் பாதிப்பு-பெண்களே

மனநல பாதிப்பு ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது, இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை, இன்னும் சொல்லப்போனால் தனக்கு மனநல பாதிப்பு உருவாகிறது என்பதை பல பெண்களே அறிவதில்லை. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு (Menstrual imbalance) பெரும்பாலும் மனநலப் பிரச்சனைகளே முக்கியக் காரணமாக அமைகின்றது. சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் காரணமாக பெண்மையை  வெறுக்கும் பெண்களுக்கும், மனதளவில் பெண்மையை ஏற்றுக் கொள்ளாதப் பெண்களுக்கும் (Rejection of one's femininity) மனநலப் பிரச்சனைகளும், சீரற்ற மாதவிடாய் சுழற்சியும் (Estrogen hormone) பாதிப்பும் ஏற்படுகின்றது. இதேப்போல் பெண்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி, கர்ப்பப்பை நீர்க்கட்டிகள், மார்பகப் புற்றுநோய் ஆகியவையும் நாள்பட்ட மனநல பாதிப்பின் முதிர்ச்சியால் ஏற்படும் மிக முக்கியப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. நாற்பதை கடக்கும் பெண்கள் கண்டிப்பாக ஒருமுறையாவது, மனநல ஆலோசகரை சந்தித்து ஒரு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளை அலட்சியப் படுத்தாதீர்கள்.