பேப்பர் உன்னதிர்கள்


பேப்பரில் மடித்து

 உணவுகளை உண்ணாதீர்கள்.


பள்ளம் மேடுகளை நிரப்பி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் தண்ணீர். அதேபோல்தான் மனிதனின் உடலும், தனக்குள் ஏற்படும் வியாதிகளை முடியுமான வரை தன்னைத்தானே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தன் ஆற்றல் மீறும் போது அது நோயாக வெளி வருகிறது.


இந்த வகையில், நாம் அன்றாடம் உடலுக்குள் எடுக்கும் உணவு வகையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உடலை அழகு படுத்த எடுக்கும் கவனத்தை விட உடலுக்குள் எடுக்கும் உணவு வகையில் கவனம் அதிகம் இருத்தல்  வேண்டும்.


செய்தித்தாள்களில் உணவுகளை வைத்து உண்ணும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடவும். பேப்பரை கலர் செய்ய பயன் படுத்தும் கலர்கள் அச்சிட பயன் படுத்தும் மை வகைகள் மிகவும் ஆபத்தான விளைவுகளை எமது உடலுக்கு தரும். அதில் இப்படியான நஞ்சுகளும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

Harmful Colours.

Pigments.

Binders.

Additive.

Preservatives. கண்ணுக்கு தெரியாத நச்சுப் பதார்த்தங்கள்  இவை எமது உடலுக்கு தீங்குகளை தரும். 


அதேபோல், வெள்ளை  பேப்பர்தான தூசி இல்லை தானே என எண்ணி  உணவை மடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அது உற்பத்தி செய்யும் போது பலருடைய கைகள் அதில் பட்டு இருப்பது மட்டுமல்லாமல் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் கழிவுகள் அதில் அதிகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி செய்யும் போதும் சில கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள் அதில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பாத்திரங்கள் துப்புரவு செய்வது போல் பேப்பர்களை துப்பரவும் செய்வதில்லை. தொற்று நீக்குவதும் இல்லை ஆகவே இதையும் பயன்படுத்தாதீர்கள்.


இதனா, பேப்பரில் உள்ள நச்சுப் பதார்த்தங்கள் நுண்கிருமிகள் ஏனைய அழுக்குகள் நோய்க்கிருமிகள் அனைத்தும் எமது உடலுக்குள் எடுத்து சென்று பல வியாதிகளை தரும் என்பதால் இனி பட்சியை பேப்பரில் மடித்து பில்டர் செய்வது, வடை மஸ்கட் வரட்டா கேக் மல்லிகை பொருட்கள் சீனி சக்கரை எதுவானாலும் பேப்பரில் மடித்து வாங்காதீர்கள் அது உங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு