இடுகைகள்

மே 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும். ஆணழகன் அப்பாவிற்கு_அழத்தெரியாது!! ⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்! ⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்! என்னடா வாழ்க்கை இது என ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!  ⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து! ⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து! ⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து! போகும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போதும்! தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!  நாம்_அவரை_கல்லெனவே நினைத்துவிட்டோம்! ⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்! ⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்! ⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள் சொற்பம் என்போம்! ஆனால், தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்! நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!  தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும்_ஜீவன்_அது! ⚽ நாம் திண்ணும் சோறும்! ⚽ உடுத்தும் உடையும்! ⚽ படித்த படிப்பும்! அப்பாவின் வேர்வையில்தான் என ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை! நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்! ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமைய...

நேர்மை கூட ஒரு போதைதான்

நேர்மை கூட ஒரு போதைதான் ...📚📚✍️✍️ ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப் போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஓட்டி வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.  வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்.. ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்துப் பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது. அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தான். உடனே வியாபாரி, "அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்"னு சொல்லி புறப்பட்டான். பணியாளோ, "ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்...

குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை

ஒரு துறவியிடம்  அழகான பெண் ஒருத்தி கேட்டாள் ... "என் கணவர்கிட்ட நிறைய குறைகள்... அவரோடு என்னால் இனி  வாழமுடியாது!!! எனவே அவரைவிட்டு நான்  விலகி விடட்டுமா?"  அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...  "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்.. எது வேண்டும் கேள்?" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்... "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்... அதோடு அதில் நிறைய முட்கள் வேறு இருக்கிறதே, இதுவா வேண்டும்?"  என்று கேட்டார் துறவி. "எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்... அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை என்றாள்..." புன்னகைத்த துறவி சொன்னார்: "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது". குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம்... நாமும் குறைகள் நிறைந்தவர்கள்தான்...! குறைகளே இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை .என்று அந்த பெண்னுக்கு புரியவைத்தார். குறிப்பு:- கதையின் நீதி  இது #ஆண், #பெண் இருவருக்கும் பொருந்தும்.