மரணத்தை விட கொடுமையான விஷயம் எது தெரியுமா
https://chat.whatsapp.com/Dh88ytneIkC62uz5thc26Q மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?...... வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை. பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதரைப்போல் வாழ்ந்தவருமில்லை; வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர். எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை. வாழ்க்கையின் அபத்தங்களை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் வாழ்க்கையில்தான் விதி கொலை தாண்டவமாடும். கீழுள்ளவை கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்...... "அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் . (1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!" இப்படி ஒரு கடிதத்துடன் எ...