பழைய ஆசிரியரை சந்திக்கும் சரணம்
ஒரு இளைஞன், சென்றிருந்த திருமண நிகழ்ச்சியில்,... தன் பழைய ஆசிரியரை,.. தேடிப்போய் சந்திக்கிறான்.
-----------------------
"என்னை தெரிகிறதா சார்?"
"தெரியலையே தம்பி...!"
(தானே அறிமுகம் செய்துகொண்ட பின்..) “ஆஹா,.. நீ என் பழைய மாணவன்.. இல்லையா?"
“ஆமாம் சார்..."
“க்ரேட்... உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு,.. எப்படி இருக்கே,.. உன் வாழ்க்கை எப்படி போகுது,.. இப்போ என்ன பண்றே,..!"
“சார்,.. நான் இப்போ ஒரு ஆசிரியரா வேலை செய்துக்கிட்டு இருக்கேன்..!”
“பிரமாதம்... நீயும் இப்போ, என்னைப் போல ஒரு ஆசிரியன்! வாவ்! .. சரி,.. உன்னை ஒரு ஆசிரியராகனும்னு தூண்டியது எது?”
“என்னை ஒரு ஆசிரியராக பணி புரிய தூண்டியது,.. நீங்கதான் சார்!”
“நானா?,.. நான் எப்படி உன்னை,…?”
“உங்கள் பாதிப்பு தான் சார்,.. காரணம்! ”
“நான் உன்னை,… எப்படி பாதித்தேன்?"
“சொல்றேன் சார்... அவ்ளோ பெரிய விஷயம் அது! ஆனா உங்களுக்கே அந்த நிகழ்வு நிச்சயம் ஞாபகம் இருக்கும். ஒரு நாள்,.. க்ளாஸ்ல ஒரு பையன் ஒரு அழகான வாட்ச் கட்டிக்கிட்டு வந்தான்! என்னால அது மாதிரி ஒண்ணு வாங்க முடியாது... ஆனா,.. எனக்கு அவ்வளவு ஆசை,.. அந்த மாதிரி வாட்ச் கட்டிக்கணும்ன்னு...!"
"அதுனால,.. அவன் அந்த வாட்சை பாக்கெட்ல வச்சிருக்கிறப்ப,... அவனுக்கு தெரியாம ... திருடிட்டேன்!”
“அவன் ... உங்க கிட்ட வந்து தன்னோட வாட்ச் திருடு போயிடுச்சு ன்னு புகார் குடுத்தான்.! நீங்க,... "இந்த பையனோட வாட்சை யாரு எடுத்தாலும் ... திரும்ப குடுத்துடுங்க! ன்னு அறிவிப்பு செய்தீங்க! ஆனா,.. அப்போ,.. என்னால அதை திரும்ப கூட குடுக்க முடியாத நிலை... காரணம் ... அவமானமா போயிடுமே ன்னு!”
“நீங்க,.. உடனே,.. வாசல் கதவை பூட்டிட்டு சொன்னிங்க ... "எல்லாரும் அவங்க பாக்கெட்ல இருக்கிறத எடுத்து வெளியில போடணும்...!"
“அப்போ நினைச்சேன்,... இதுதான், என்னோட வாழ்க்கையின் மிகவும் அவமானகரமான நிகழ்ச்சியா இது இருக்கப்போறது ன்னு!”
“ஆனா,.. நீங்க,... "பசங்களா,... எழுந்து நில்லுங்க,... அத்தனை பெரும் கண்ணை மூடிக்கணும் !" ன்னு சொல்லிட்டு,... நீங்க,.. ஒவ்வொரு பையன் கிட்டயும் போய்,.. அவங்க பாக்கெட்ல கையை விட்டு,.. சோதனை செய்தீங்க!”
“என் கிட்டயும் வந்தீங்க,.. என் பாக்கெட்லேர்ந்து நான் திருடிய வாட்சை எடுத்தீங்க!.. அப்புறம் என்னை தாண்டி,.. அத்தனை பேரையும் சோதனை செய்துட்டு,... "பசங்களா,.. இப்போ கண்ணை திறக்கலாம்,... ன்னு சொல்லிட்டு,.. வாட்ச் சொந்தக்காரனிடம் அவன் வாட்சை குடுத்தீங்க!”
“ஆனா... என் கிட்ட நீங்க ஒரு வார்த்தை கூட எதுவும் சொல்லல ! அப்ப மட்டுமில்ல,.. நான் ஸ்கூல்ல இருந்த அத்தனை வருஷமும், அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தது ன்னு கூட நீங்க பேசியதில்லை.!”
“இந்த உங்கள் அணுகுமுறை,... என்கிட்டே ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியது! நீங்க,.. என்னோட மானத்தை எப்படி காப்பாத்தினீங்க ன்னு நினைச்சு நினைச்சு பார்ப்பேன்! நான் செய்த வேலைக்கு,... என்னை சுலபமா ஒரு திருடன், உதவாக்கரை, கேவலமான வளர்ப்பு,.. வெறுக்கத்தக்க மாணவன்,.. இந்த மாதிரி பட்டம் கட்டி என் வாழ்க்கையை நாசம் செய்யாமல்... என் மானத்தை காப்பாத்தினீங்க! நான் செய்த திருட்டை,.. அந்த வாச் சொந்தக்காரன் கிட்டயோ,.. வேற மத்தவங்க கிட்டயோ கூட இல்ல ... என் கிட்டயே கூட அது பத்தி ஒரு வார்த்தை கூட பேசல!”
“ஒரு (கேவலமான) விஷயம் நடந்துருச்சு,.. முடிஞ்சுருச்சு,.. அவ்வளவுதான் ன்னு விட்டுட்டீங்க! எனக்கு.. உறைக்க வேண்டியது உறைத்து விட்டது! அதோட விட்டுட்டீங்க!”
“அதை நான் நினைச்சு நினைச்சு அதிசயப்படுவேன்! வாவ்! ஒரு ஆசிரியர் ... இப்படித்தானே இருக்கணும்! ஒரு குரு இப்படித்தானே நடந்துக்கணும்! ன்னு புரிஞ்சுது! .... நானும் அப்படிதான் வாழ,.. மாணவர்கள் வாழ்வில் அதுபோல நல்ல பாதிப்பை உண்டாக்கும் அந்த ஆசிரியர் தொழிலைத்தான் செய்யணும் ன்னு தீர்மானிச்சேன்!”
“அபாரம்!.. அற்புதம்!.. அப்படியெல்லாமா நடந்தது உன் வாழ்வில்? பிரமாதம்!"
“சார்,.. நிச்சயமா உங்களுக்கு நினைவு இருக்கணுமே சார்!... என்னோட பேரை சொன்னதும்... அந்த வாட்ச் காணாம போனது... எல்லோரையும் கண்ணை மூடிக்க சொன்னது... அப்புறம் .. என் பாக்கெட்லேர்ந்து நீங்க திருடுபோன வாட்சை எடுத்து,... எல்லாமே உங்களுக்கு நினைவுல இருக்கணுமே சார்! அவ்வளவு பெரிய ஒரு விஷயம் நடந்திருக்கே!"
"இல்லைப்பா,... எனக்கு உன் பெயரை கேட்டதும் கூட,.. இதெல்லாம் எதுவும் நினைவுக்கு வரலப்பா...!"
"எப்படி சார்?... இவ்வளோ பெரிய ஒரு விஷயம்... !"
ஒரு நீண்ட மௌனத்துக்கு பின் ...
...
...
...
...
“ஏன்னா... தம்பி.. நானும்,.. அந்த நேரத்துல,.. என்னோட கண்ணையும் மூடிக்கிட்டுதான் இருந்தேன்!”
-----------------------
-----------------------
ஒரு ஆசிரியனுக்கும், குருவுக்கும்,..
ஒரு ஆட்சியாளனுக்கும், தலைவனுக்கும்,..
வெறுமென பெற்றதால் பெற்றோர் என்பதற்கும், பிள்ளையை அற்புதமான மனிதனாக வளர்த்ததால் பெருமைமிகு பெற்றோராய் அடையாளப்படுவதற்கும்...
வித்தியாசத்தை... முகத்தில் அறையும் விதமாய் சொல்லி, அனுமதிக்கு காத்திராமல் மனதுக்குள் சென்று அமர்ந்து விட்ட இக்கதை இணையத்திலிருந்து...
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later