யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்
*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், யாரெல்லாம் நம்மிடமிருந்து விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.!* *அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் இதை முடிவு செய்கிறது.* *வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.* *யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.* *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.!* *வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்...* *தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* *பணம் இருந்தால் அவனை உயர்ந்தவனாக கருதும் இவ்வுலகம் குணம் இருந்தாலும் பணமில்லை என்ற காரணத்தால் அவனை குப்பையாகவே அடையாளம் காண்கிறது.* *நடிப்பவனை நல்லவனாகவும் உண்மை பேசுபவனை பைத்தியக் காரனாகவும் அன்பு காட்டுபவனை ஏமாளியாகவும் சித்தரிக்கும் இவ்வுலகம் இப்பேருண்மையை எடுத்துச் சொல்பவனை மட்டும் கோமாளியாகவும் பார்க்க தவறுவதில்லை..!* *இறைவன் தனக்குப் பிடித்தவர்க...