எமது பிள்ளைகள் திறமை

எமது பிள்ளைகள்

...........................


பிள்ளைகளை வெறுமனே ஆசிரியர்களிடம் அல்லது பாடசாலையிடம் ஒப்படைத்துவிட்டு இருந்துவிடாமல் அவர்களின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் நலமான மாற்றம் ஏற்படுவதற்கு உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருக்கே இருக்கின்றது. 

அதற்கான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகின்றோம்.

 

♦️அடிக்கடி பிள்ளையுடன் உரையாடுங்கள் 


♦️பிள்ளை ஒருவிடயத்தை பார்க்கும் விதம் பெற்றோர் பார்க்கும் விதத்தைவிட மிகவும் வித்தியாசமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள்


♦️குறைந்தது ஒரு நாளில் 30 நிமிடங்களையாவது பிள்ளையுடன் வாசிக்க வாசித்துக்காட்ட செலவிடுங்கள் 


♦️புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்ற வாசிப்பு சாதனங்களை வீட்டில் உபயோகத்திற்கு வைக்கவும் 


♦️பாடசாலைக்கும் வீட்டிற்கும் இடையிலான உறவையும் நெருக்கத்தையும் எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவு படுத்துங்கள் 


♦️பாடசாலை தொடர்பான விடயங்களில் நீங்கள் அக்கறையாக இருப்பதை பிள்ளைக்கு உணரவிடுங்கள்  


♦️பிள்ளையின் புத்தகங்களை ஒவ்வொரு நாளும் பார்ப்பதை பிள்ளைக்கு தெரியவிடுங்கள்.  


♦️பாடசாலையில் நடைபெறும் விடயங்களை கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதை பிள்ளைக்கு உணர்த்துங்கள், அவர்களுடன் பண்பாக செயற்படாதவர்களை அடையாளம் கண்டு உடனடியாகச் செயற்படுங்கள்.


♦️பிள்ளைக்கு கேள்வி கேட்க வாய்ப்புகள் கொடுங்கள் 

நீங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உணரும் வகையில் செயற்படுங்கள்.


♦️பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்கு நீங்கள் தயாராக இருப்பதை அவர்களுக்கு உணரவிடுங்கள்


♦️அவர்களோடு சேர்ந்து விளையாடுங்கள் 


♦️இயற்கையை இரசிக்க கற்றுக்கொடுங்கள்


♦️தொலைக்காட்சி கார்டூன் பார்க்கும் நேரத்தை வரையறை செய்து கொடுங்கள். மாற்றீடாக வேறுவிதமான பொழுது போக்குகளில் நீங்களும் சேர்ந்து பிள்ளையையும ஈடுபடுத்துங்கள் 


♦️தொலைக் காட்சியை, கணிணியை கற்றலுக்குத் தேவையான கருவிகளாக பயன்படுத்த உதவிசெய்யுங்கள்


♦️பிள்ளை தெரிந்துகொண்ட விடயமொன்றை விவரித்துக் கூறுமாறு கேட்டு, விவரித்து முடியும் வரை அமைதியாக கேட்டுக்கொண்டிருங்கள்


♦️பிள்ளையின் கற்றல் பயணத்தின் போது நீங்கள் ஆதரவளிப்பதை உணரவிடுங்கள்


♦️பிள்ளை சங்கடமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மிகவும் ஆதரவாக இருங்கள்


♦️எந்தச் சந்தர்ப்பத்திலும் பிள்ளை படிக்கும் பாடசாலையையோ, ஆசிரியர்களையோ பிள்ளையின் முன் விமர்சிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்


📍பொறுத்துப் போகக்கூடிய வீடாக - 

📍ஊக்கம் அளிக்கக்கூடிய வீடாக

 📍புகழ்ச்சி கிடைக்கக்கூடிய வீடாக - 

📍நேர்மையும் பாதுகாப்பும் நிறைந்த வீடாக

📍ஒப்புதல் அளிக்கின்ற வீடாக 

📍ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கின்ற வீடாக

📍சேர்ந்து செயற்படக்கூடிய வீடாக - 


📍புன்னகையும் புதுமையும் நிறைந்த வீடாக

எமது வீட்டை அமைத்துக்கொள்வோம்.


அதன் மூலம் கல்வியும் பண்பாடும் சிந்தனையும் நிறைந்த பிள்ளைகளாக எமது பிள்ளைகளை ஆக்க வழிஅமைத்து கொடுப்போம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு