இடுகைகள்

ஏப்ரல் 27, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகளைபொள் மருமகள்

எனக்கு 77 வயது..! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்..! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்..! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல..! இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.. கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக..! போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது..! முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.., இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்..! கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும்..! இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால் எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.., துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி அவர்களின் ஆடையோடு கூட ஒட்டவிட...

மருத்துவரின் நல்ல குணம்

ஒரு #மருத்துவர், #நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்... விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார். மருத்துவரைக் கண்டதும் #கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார். மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று #பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார். மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளி...

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை... ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்... ▪திருடக் கூடாது. ▪பொய் சொல்லக் கூடாது. ▪லஞ்சம், ஊழல் கூடாது. ▪கடத்தல் கூடாது. ▪வட்டி கூடாது. ▪பதுக்கல் வியாபாரம் கூடாது. ▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது. ▪நம்பிக்கைத் துரோகம் கூடாது. ▪பிறரை ஏமாற்றக் கூடாது. ▪பிறர் குறை பேசக் கூடாது. ▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. ▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. ▪அனாதைகளை விரட்டக் கூடாது. ▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது. ▪பிறரை வம்பிழுக்கக் கூடாது. ▪எவரையும் கொல்லக் கூடாது. ▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது. ▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது. ▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது. ▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது. ▪எவரையும் துன்புறுத்தக் கூடாது. ▪பெரும் சிரிப்புக் கூடாது. ▪பெருமை கூடாது. ▪பேராசை கூடாது. ▪ஆடம்பரம் கூடாது. ▪ஆணவம், அகம்பாவம் கூடாது. ▪ஆட்டம் போடக் கூடாது. ▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது. ▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது. ▪அனுமதியின்றி பிறர் வீ...