இடுகைகள்

ஆகஸ்ட் 13, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலையில் எழுந்தவுடன் முதல் வேலை.

காலையில் முதல் வேலை...!! காலை எழுந்தவுடன் காலைக் கடன் முடித்தால் தான் நாம் நிம்மதி அடைவோம். அப்புறம் தான் நாம் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்வோம். உடலும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாமை, அதிகப்படியான மன அழுத்தம், வயது, குறிப்பிட்ட வகை வைட்டமின் மருந்துகள், நார்ச்சத்து  மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதற்கு வைத்தியம் வீட்டிலேயே உள்ளது.  பின்வரும் முயற்சிகளை செய்யலாம்.   வயிற்றை சுத்தம் செய்ய, சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கி ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால், வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணம் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றையும் சுத்தம் செய்யும்.  வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்து, 15 நிமிடம் கழித்து எதையும் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு, மலச்சிக்கல் நீங்குவதோடு, செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். ...

மனிதன் பற்றி உண்மை உளவியல் தகவல்

#மனிதம் பற்றிய #உளவியல் தகவல் 1. _ஏழாண்டுகளுக்கு மேலாக *நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும்* நீடிக்குமாம்._  2. _அடிக்கடி *ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.*_  3. எல்லாவற்றுக்கும் _எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்க_ ளாம். 4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது _ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்._  5. நாளொன்றுக்கு நான்கைந்து _பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்._  6. உங்கள் _மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்._  7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம். 8. *மிக _விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்_ தானாம்.*  9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் -...

சுய ஒழுக்கம் _ self disipline

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது  1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். *இன்னும் கல்யாணம் ஆகலயா?* *குழந்தைகள் இல்லையா?* *இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?* *ஏன் இன்னும் Car வாங்கவில்லை?* இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர...

திறமையாக உழைப்பதே மேல்

"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்". ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன...

கொடுப்பவர் அல்ல கடவுள்

 🙏🏻 கொடுப்பவர் அல்ல கடவுள்; கொடுக்க வைப்பவர் தான் கடவுள்🙏🏻 ⚜ முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை... ⚜ ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்... ⚜ ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்... ⚜ அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்து வந்தார்கள்... ⚜ அரசன் அவர்களிடம் இவற்றிலிருந்து இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரை சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்தது காரணம் என்ன? என்று கேட்டான் அரசன்... ⚜ அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன்." அரசே இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான். இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அத...