Posts

Showing posts from July 27, 2020

மான் கதை

_ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்.._ _அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.._ _அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.._ _இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.._ _அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.._ _மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன.._ _மான் தன் இடப்பக்கம் பார்த்தது.._ _அங்கே_ *ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்..* மானின் வலப்பக்கம் *பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது..* _ஒரு கருவுற்ற மான்.. பாவம் என்ன செய்யும்?_ _அதற்கு வலியும் வந்து விட்டது._ மேலும் எங்கோ *பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது..* _*என்ன நடக்கும்?..*_ *மான் பிழைக்குமா?...* _*மகவை ஈனுமா ?*_ *மகவும் பிழைக்குமா?...* _*இல்லை.. காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?..*_ *_வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?.._* *_புலியின் பசிக்கு உணவாகுமா?.._* _பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும்,_  _பொங்கும் காட்டாறு மறு புறம்,_ _பசியோடு புலியும்,_ _வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.._ _மான் என்ன...

வாழ்க்கை பாடம் அருமையான கதை

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார...