வாழ்கை வாழ்வதற்கு தான்

 வாடகைக்கு இருக்குற வீட்டுக்கு வரும் சொந்தங்களும் நண்பர்களும் " வீடு நல்லாருக்கு , இந்த வீட்டையே வாங்கிட வேண்டியது தானே "" என்பார்கள் 


நான் ஏன் வீடு வாங்க மாட்டேன் என்பதற்கான காரணங்கள் 


1. இப்போ இருக்கும் duplex வீடு , ஹோம் ஜிம் கார் பார்க்கிங் , தனி வீடு , பள்ளிக்கு அருகில் ,நிறைய இடம் என்று சூப்பரா இருக்கு 


நான் கொடுக்கும் வாடகை 15,000


ஆனால் வீட்டின் விலை 75 லட்சம் 


அவ்வளவு தொகை என்னிடம் இல்லை 


2. Emi ல தான் வாங்கணும் 


3. அடுத்த 20 வருஷத்துக்கு மாதம் 60 k டு 70k கட்டணும் 


4. அந்த emi கட்டுற காசுல , வயது இருக்கும் போதே பொண்டாட்டியோட 10 வெளிநாட்டு டூர் போகலாம் 


இல்லைனா மாதம் மாதம் நகை வாங்கலாம் 


60 k ல எவ்வளவோ அனுபவிக்கலாம் 


5. இன்னும் 11 வருஷத்துல என் பொண்ணு காலேஜ் போயுடுவா , 


அதுக்கு அப்பறம் இந்த ஏரியா , பெரிய வீடு ரெண்டுமே தேவையில்லை 


6. 33 வயசுல வீடு வாங்குன , நான் retire ஆகும் போது வீடும் retire ஆகி இருக்கும் , அதுக்கு அப்பறம் எங்க போறது 


7. முக்கியமான விஷயம் , அடுத்த 20 வருஷமும் பேங்க் காரன் மெசேஜ் கால் பண்ணுவான் 


8. ஒரு தொழிலுக்காக கடன் வாங்கலாம் , வருமானம் பெருகும் 


குடியிருக்க வீட்டுக்கு கடன் வாங்கினால் , கடன் மட்டும் தான் இருக்கும் 


9. அடுத்த 20 வருஷத்துல , பேங்க் கு வட்டியா 50 லட்சம் கட்டிருப்பேன் 


10. எனக்கு வார்டு ல இருக்க பெட் ல படுத்தாலும் தூக்கம் வரும் , சொந்த வீட்ல படுத்தா தான் நிம்மதினு இல்லை 


11. போதும் டா இந்தியா னு 10 வருஷம் கழிச்சு பொண்டாட்டியோட ஆஸ்திரேலியா போன்ற நல்ல சம்பளம் தரும் நாட்டுக்கு கூட போகலாம் , யாருக்கு தெரியும் 


12. இப்போ இருக்குற வாடகை வீட்ல , எந்த maintenance செலவும் எங்களுக்கு இல்லை , அனைத்தும் owner தான் செய்கிறார் 


13...வாழ்க்கை வாழ்வதற்கே , emi கட்டி சாவதற்கு அல்ல


Dr. Prakash


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு