பணத்தை எப்படி செலவு செய்கிறோம்
#பணத்தை எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதைவிட எப்படி செலவளிக்கிறோம் என்பதில் கவனம் கொள்ளுங்கள். ஒரு கல்லூரி மாணவி ஒருவர் தன் #நண்பர்களுக்கு_ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, எவ்வளவு வேண்டும்? என்று கேட்டார். ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்றார் மகள். வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா? என்று வியந்த அப்பா, என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன் என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு இப்போதே பணம் வேண்டும் என்று கேட்டார். அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது. ஆ...