வியாபார யுக்தி
வியாபார யுக்தி - Marketing Strategy! ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பஸ்ஸில் பழக் கூடையுடன் ஏறினார். '‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். அவன்தான்யா நிசமான வியாபாரி, அவன்தான்யா நிசமான வியாபாரி, எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். '‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, ‘'ஆறு பழங்கள் பத்து ரூபாய்’' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்! பிஸினெஸ் ரகசியம் ! மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகே அழைத்தவர், ”அந்த இளைஞ...