இடுகைகள்

அக்டோபர் 8, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூண்டு சாப்பிட்டால் நன்மை

*இரவு படுக்கு முன் ஓரு பூண்டை வறுத்து சாப்பிட்டு விட்டு ஓரு டம்ளர் வென்னீர் குடியுங்கள்.* அப்புறம் பாருங்க அதன் அதிசயத்தை. கேஸ் ட்ரபிள் சரியாகிவிடும். *பூண்டை சுட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.* பூண்டு நம் அனைவரின் சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்வு பொருட்களில் ஒன்றாகும். பூண்டு ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, அதிலுள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது. இது பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் சமையலில் பூண்டு விழுதை சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் நீங்கள் பூண்டை வறுத்து கூட சாப்பிடலாம். அது மட்டுமின்றி பச்சை பூண்டினுடைய ஊட்டச்சத்தை விட வறுத்ததில் நிறைய நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் அதிகம். எனவே உங்கள் உணவுப்பட்டியலில் வறுத்த பூண்டை சேர்த்து கொள்ளுங்கள். அந்தவகையில் தற்போது வறுத்த பூண்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். செய்முறை பூண்டு தலையின் வெளிப்புற தோலை மட்டும் உரித்து எடுத்து கொள்ளுங்கள். பின்பு அ...

வாழ்க்கையின் சிறிய கதை

 கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள். கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத் தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும், “ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார். சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள். ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள்.  அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச் சுற்றி வருவான். இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார். ...

சுண்டர்பிச்சை சொல்லும் கதை

 *சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு* ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார். நான் என் கா...

மனநிறை வோடு வாழ வேண்டும்

 *உம் கணவர் நூறு ரூபாய் சம்பாதித்தாலும் மன நிறைவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்* சகோதரிகளே..... ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கி கட்டாயம் வாசியுங்கள்  "என்ன நம்ம கணவருக்கு மாதம் 15000 தான் சம்பளமா இதை வைத்து என்ன செய்யுறது" ஆம் இதுபோல் சிந்தித்து கவலைக் கொள்ளும் பெண்கள் சிலர் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் 😔 தன் கணவன் செய்யும் வேளையில் அவர் வாங்கும் சம்பளத்தில் தான் சில பெண்களுக்கு கவுரவம் இருக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள்.  உங்கள் கணவர் ஹராமான வேளை செய்து தவறான வழியில் சம்பாதித்தால் நீங்கள் கவலை கொள்வதில் அர்த்தமுன்டு ஆனால் அவர் ஹலாலான முறையில் சம்பாதித்து அவரால் முடிந்த வருமானத்தை கொடுத்தால் அதைக் கொண்டு நீங்கள் திருப்தி அடையுங்கள்.  " ஒரு பெண் எவ்வளவு சிரமப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கிறாள் என்பது அனைவருக்கும் தெரியும், பிரசவம் என்பது மறுபிறவி என்பது போல் இருக்கும் என்றெல்லாம் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்", ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எத்தகைய கஷ்டமானதோ அதே போன்று தான் ஒரு ஆண் தன் குடும்பத்தை வழி நடத்த உழைப்பதும் கஷ்டமானது... தாய், தந்தை, மனைவி என்று இருக்கும் போது...

எல்லாருக்கும் எல்லாம் உண்டு

எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது... ! 💗🙏🏻ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்... 💗👌🏻ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்... 💗👍🏻பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்... 💫🙏🏻ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்... 💗👍🏻ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது... 💗🤷🏻‍♂இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை... 💶🤦🏻‍♂22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்... 💶👍🏻ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்... 👌🏻💗எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் *முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.* கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை... 🤷🏻‍♂சர்ச்சில் தனது 82 வது வயதில் Histor...