குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை
ஒரு துறவியிடம்
அழகான பெண் ஒருத்தி கேட்டாள் ...
"என் கணவர்கிட்ட நிறைய குறைகள்...
அவரோடு என்னால் இனி வாழமுடியாது!!!
எனவே அவரைவிட்டு நான்
விலகி விடட்டுமா?"
அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...
"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்..
எது வேண்டும் கேள்?" என்றார்.
அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...
"அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்...
அதோடு அதில் நிறைய முட்கள் வேறு இருக்கிறதே,
இதுவா வேண்டும்?"
என்று கேட்டார் துறவி.
"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...
அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை என்றாள்..."
புன்னகைத்த துறவி சொன்னார்: "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".
குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம்...
நாமும் குறைகள் நிறைந்தவர்கள்தான்...!
குறைகளே இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை .என்று அந்த பெண்னுக்கு புரியவைத்தார்.
குறிப்பு:- கதையின் நீதி
இது #ஆண், #பெண் இருவருக்கும் பொருந்தும்.
Comments
Post a Comment
Thank you we will call back later