வாழ்வை வளமாகும்
வாழ்வை
வளமாக்கும் வழிமுறைகள்....
* அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள்.
* தவறை எண்ணி வருத்தப்படாதீர்கள். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக அவை இருக்கிறது. எனவே தவறை பெரும் பேறாகக் கருதுங்கள்.
* விதையின் சக்திதான் மரமாக வளர்கிறது. அதுபோல ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிக்கும் மன ஆற்றலை பொறுத்தே அமைகிறது.
* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.
* மன ஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.
* பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடைய செய்கிறார்கள்.
* அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். அனைத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்களுக்கு திருப்தி இருந்தால் பின்பற்றலாம். இல்லையெனில் உங்களது கருத்தில் உறுதியாக இருங்கள்.
* எந்த வேலையையும் உங்களது விருப்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளுங்கள்.
* இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.
* வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later