யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்


*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், யாரெல்லாம் நம்மிடமிருந்து விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.!*


*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் இதை முடிவு செய்கிறது.*


*வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.*


*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.*


*நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.!*


*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*


*மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்...*  

*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*


*பணம் இருந்தால் அவனை உயர்ந்தவனாக கருதும் இவ்வுலகம்  

குணம் இருந்தாலும் பணமில்லை என்ற காரணத்தால் அவனை குப்பையாகவே அடையாளம் காண்கிறது.*  

  

*நடிப்பவனை நல்லவனாகவும்  

உண்மை பேசுபவனை பைத்தியக் காரனாகவும்  

அன்பு காட்டுபவனை ஏமாளியாகவும் சித்தரிக்கும் இவ்வுலகம் இப்பேருண்மையை  

எடுத்துச் சொல்பவனை மட்டும் கோமாளியாகவும் பார்க்க தவறுவதில்லை..!*


*இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி  

பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.!*


*நிலவை....  

தூரத்தில் இருந்து ரசிப்பதை போல...*  

*சில உறவுகளையும் தூரத்திலிருந்தே ரசிக்க கற்றுக் கொண்டோமானால் சில வலிகளாவது இல்லாமல் இருக்கும்.*


*தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதிடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே நம் ஆயுதமாக வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.!*


*அவர்களுக்கும் புரியவைக்க வரும் காலம் என்ற ஒன்று உள்ளதால் சிந்தித்து செயல்படுவதே நமக்கு நல்லது*


**இதுவும் கடந்து போகும்.**


*இவ்வுலகில் எதுவுமே நிலையென்று ஒன்றுமில்லை.*


*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*


*யாரும் நம் கண்ணீரை பார்ப்பதில்லை.!  

*யாரும் நம் கவலைகளை பார்ப்பதில்லை.!!*  

*யாரும் நம் வலிகளை பார்ப்பதில்லை.!!!


*ஆனால் எல்லோரும் நம் தவறை மட்டும் பார்க்க தவறுவதில்லை.*


*மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.


*தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.*


*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு