60 வயதின் வாழ்க்கை


_*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_


_*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_

_*என்று கேட்டேன்.*_


_*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.*_


_*அவ்வாறே அவர் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட பட்டியலை அனுப்பினார். இதோ 👇*_


_*1) என் பெற்றோரிடம்,*_

_*என் உடன்பிறந்தோரிம்,*_

_*என் மனைவியிடம்,*_

_*என் குழந்தைகளிடம்,*_

_*என் நண்பர்களிடம்*_

_*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_

_*கொண்டிருந்த நான், இப்போது*_

_*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_


_*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_


_*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_


_*பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன்.*_


_*4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி*_ _*டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு*_  _*மீதிச் சில்லறைக்*_

_*காசுக்காகக்*_ _*காத்திராமல்*_ _*திரும்புகிறேன்.*_


_*இதனால் அவர் முகத்தில் அரும்பும்*_

_*புன்னகையை விரும்புகிறேன்.*_


_*5) என்னைவிட முதியவர்கள்*_

_*ஒரு செய்தியை - நிகழ்வை -*_ _*கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும்,*_ _*'இதை நீங்கள்*_

_*முன்பே*_ _*கூறிவிட்டீர்கள்'*_   _*என்று முகத்தில்*_ _*அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன்.*_


_*6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.*_


_*நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது*_   __*(Peace is more precious than perfection)*_ _*என்பதை உணர்ந்துகொண்டேன்.*_


_*7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.*_


_*8)என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன்.  _  *(personality speaks louder than appearances.)*_


_*9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன்.*_


_*10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை.*_


_*11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை.*_


_*12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.*_


_*13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன்.*_


_*14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன்.*_


_*15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும் முற்றிலுமாக தவிர்த்துள்ளேன்.*_


_*16) என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன்.*_


_*17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.*_


_*18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன்.*_


_*19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன்.*_


_*ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்?*_  _*எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே!*_   _*அமைதியான அன்பான வாழ்க்கைக்குக் கைகொடுக்குமே! வழி காட்டுமே!*_


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு