இடுகைகள்

நவம்பர் 6, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறிய கதை தவறாமல் வாசிக்கவும்

எனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்...

கொய்யா வின் நன்மைகள்

 கொய்யாப்பழத்தைக் கடித்துச் சாப்பிடுங்கள். பற்களும் ஈறுகளும் பலம் பெறும். கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப்பின் கனிந்த கொய்யாப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடலாம். இரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புக்கள் உள்ளன.

பெண்ணிடம் ஏதிர்பார்ப்பு

 ஒரு ஆண் விரும்பும் பெண்ணின் குணங்கள். 1. அதிகம் கோபப்படாதவள் . 2. அதிகம் இரக்கம் கொண்டவள். 3. துன்பத்தில் துனண நிற்பவள். 4. நல்ல விடயங்களைக் கேட்டு நடப்பவள். 5. மரியாதையுள்ளவள். 6. தன் தாய் தந்தையிலும் அன்பு செலுத்துபவள். 7. தன் குழந்தையை முகம் சுழிக்காமல் பார்த்துக் கொள்பவள். 8. அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள். 9. தனக்கு விருப்பான உணவை சுமாராவது தன் கையாள் சமைத்துத் தருபவள். 10. தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்காதவள். 11. குறை கூறாவதள். 12. சுறு சுறுப்பானவள். 13. மென்மையானவள். 14. சிரித்த முகமுடையவள். 15. மனம் விட்டுப் பேசக் கூடியவள். 16. நகைச்சுவையானவள். 17. தன் முயற்சிக்குத் துணை நிற்பவள். 18. ஆரோக்கியமானவள். 19. மார்க்கப் பற்றுள்ளவள். 20.சின்ன சின்ன அன்பு சண்டை செய்து அன்றிரவே மறந்து பேசக் கூடியவள்.

கனவுகளை ஓழுபோதும் சிடரிவிடாதீர்கள்

 பெறுமதி...! கருத்ததரங்கொன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றைத் தூக்கிப் பிடித்துச் சபையோருக்குக் காட்டினார். "இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?" என அவர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. பின்னர் அவர் மெழுகுவர்த்தியொன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. "இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார். சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர். "நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர், தனது கையிலிருந்த மோதிரத்தைக் கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார். பின்னர் அதனை உயர்த்திப் பிடித்து, "இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா?" எனக் கேட்டார். அப்போதும் சபையில் இருந்த அதிகமானோர் தம் கைகளை உயர்த்தினர். "சரி, ...

யூனிவேர்சிட்டி போகும் முன் வாசிக்கவும்

பல்கலைக் கழகம்  போக முன் ஒருதடவை இதை வாசியுங்கள் ! வெட்டுப் புள்ளி வந்து உள்ளது. பல்கலைக் கழகம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இப்போது என்ன செய்யவேண்டும்? வாழ்கையின் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளீர்கள். இப்போது குடும்பத்தின் கண்காணிப்பிலிருந்து தூரப்போய் விட்டீர்கள். பிள்ளை பல்கலைக் கழகம் போய்விட்டான் என அப்பா அம்மா இனி  கவனிக்கப்போவதில்லை. ஆனால் இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. கொண்டாட்டம் ஒரு புறம் இருக்க மறுபக்கம் உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். எதிர்பார்த்த பீடம் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். கிடைத்த பீடத்திலேயே எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதிக்கலாம். நீங்கள் இப்போது வளர்த்துக்கொள்ள வேண்டிய இரு முக்கியமான விடயங்கள் கணணி அறிவு மற்றும் ஆங்கில அறிவு. எனக்கு இது சரிவராது என பயப்படாமல் துணிந்து படியுங்கள்.  அடுத்து நீங்கள் தெரிவான துறையில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை வாசியுங்கள். அந்தத் துறையில் Phd செய்தவர்கள் செய்த ஆய்வுக்கட்டுரைகளை வாசியுங்கள். புரியாது விட்டாலும் பல முறை வாசிக்கும் போது ஒரு ஆய்வுக...

வாழ்க்கையின் சிறிய கவிதை

பிறந்தோம்  வாழத்  துன்பப்பட்டு  வாழ்ந்தோம்  மறைந்தோம்  என்பது  இயலாதவர்களின் வாழ்க்கை  பிறந்தோம்  வாழ வழிதேடி  வாழ்ந்தோம்  மறைந்தோம்  என்பது  சாதாரணமானவர்களின் வாழ்க்கை  பிறந்தோம்.  வாழ்ந்தோம்  மறைந்தோம் என்பது இயன்றவர்களின் வாழ்க்கை பிறந்தோம்  சாதித்தோம் வாழ்ந்தோம் என்பது சாதனையாளர்களின் சரித்திரம் பிறந்தோம்  வாழ்ந்தோம்  வென்றோம்  என்பது  வெற்றியாளர்களின்  சரித்திரம்  பிறந்தோம்  வாழ்ந்தோம் பிறருக்கு  கொடுத்தோம்  மறைந்தோம்  என்பது  வள்ளல்களின் சரித்திரம்  பிறந்தோம்  வாழ்ந்தோம்  வாழவைத்தோம்  என்பது  பண்பாளர்களின் சரித்திரம் பிறந்தோம்  வளர்ந்தோம் வாழ்ந்தோம்  வாழ்வித்தோம் என்பது உயர்ந்தவர்களின்  சரித்திரம்  பிறந்தோம்  பிறவியின் பொருள்  உணர்ந்தோம்  உலகிற்கும்  உணரவைத்தோம்  வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்  என்பது  அருளாளர்களின்  சரித்திரம்  பிறந்தோம்  பிறப்பின் இரகசியம்...

ஜென்ஸ் பாண்ட் கதை

!!...மிக ஏழ்மையில் பிறந்து சாதித்த  James Bond என்ற Sean Connery .. . ................எமது இளமையை கொள்ளை கொண்ட Sean Connery நேற்று இறந்தார் ... . ................Edinburgh Scotland இல் ஒரு மிக ஏழ்மையான கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் ... . .............................அவருடைய இன்றை  மனைவி சொல்கிறார் Micheline Roquebrune ...இவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாதித்தவரை நான் கண்டதில்லை என்று ... . ......மிக ஏழ்மையான பகுதியாகிய Fountainbridge, Edinburgh இல் 1930 இல்  பிறந்தவர் .. .......................அவர் ஒருபோதும் தனது ஏழ்மையான பிறப்பையோ அந்த ஏழைகளின் பகுதியையோ மறைத்தும் இல்லை , மறந்ததும் இல்லை .. . .....நான் பிறந்த பகுதியில் மிக மிக இளமையிலேயே சிறுவர்கள் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் .. . .............அவ்வளவு ஏழ்மை .....ஒரு சிறிய வீட்டில் 9 பேர் வாசிப்பார்களாம் .. . .........................தனது 13 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறி பால் விற்றுபவராக தொழில் செய்தார் , பின்பு லாரி சாரதியாகவும் வீட்டு பாவனை பொருட்களை துடைப்பவராகவும் தொழில...

கணு மெல் இருக்கும் ஆமை

கணு மேல் இருக்கும் ஆமை! ஒரு ஏழை விவசாயியின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார் ஒரு டாக்டர். அப்போது இருவருக்குமிடையில் உரையாடலொன்று தொடங்கியது. இறுதியில் அரசியல்வாதிகளைப் பற்றியும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பற்றியும் உரையாடல் உருவானது. அப்போது அந்த ஏழை விவசாயி இவ்வாறு சொன்னார். "என்னைப்பொறுத்தவரை கணு மேல் இருக்கும் ஆமை போல்தான் பெரும்பாலான அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்." 'கணுமேல் இருக்கும் ஆமை' என்பது என்ன என்று டாக்டருக்கு புரியவில்லை. அந்த ஏழை விவசாயியிடம் விளக்கம் கேட்டார். இவ்வாறு பதில் கிடைத்தது: "நாட்டுப்புற சாலைகளில் நீங்கள் பிரயாணம் செய்யும் போது சில வேளைகளில் வேலிக் கணுக்களின் மேல் ஆமை ஒன்று இருப்பதை கண்டிருப்பீர்கள். அதனைத்தான் கணு மேல் இருக்கும் ஆமை என்றேன்". இப்போதும் கூட டாக்டருக்குப் புரியவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது. அதனை அவதானித்த விவசாயி மீண்டும் தொடர்ந்தார். " உயரமான அந்தக் கணுவின் மேல் அந்த ஆமை தானாக ஏறி உட்காரவில்லை என்பது உங்களுக்கு தெரியும். அதுபோல ஆமை அந்தளவு உயரத்தில் இருக்கவேண்டிய ஒன்றுமல்ல...

உலகம் கண்ணாடி போன்றது

தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று......   தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது....!! அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ......!! அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன....!! சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது....!! அந்த நூறு நாய்களும் பதிலுக்கு.... "உர்ர்.. உர்ர்.." என்றன.  அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது...!! இருந்தும் கோபம் தாளாமல்..... "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தன......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்".....   மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டன.....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.  உடனே.... "வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"..... பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன....!! இந்த நாய் பயத்தின் உச்சத்தில்.... வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது....!! இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.......!! இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்..... 1. தான் நுழைந்தது.....

கவலை பட வேணடாம்

 கவலை. கவலைப்படுவதால் எதுவும் நிகழப் போவதில்லை என்ற தெளிவு முதலில் வேண்டும். நாம் செய்த நல்ல செயலுக்கு யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கக் கூடாது. நாளை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். கண்களுக்கு எதிராக உள்ள கடமைகளை பட்டியலிட்டு பார்த்து, அதில் எதை முதலில் செய்தால் மனநிறைவு ஏற்படும் என ஆய்ந்து அதனைச் செய்ய வேண்டும். இத்தருணம் என்பது மிக மிக அற்புதமானது என்பதை உணர வாழும் வாழ்க்கைக் காலத்தை கணக்கிட வேண்டும். எல்லாமே மனசுதான் என்பதை புரிந்து கொள்வதற்கு தகுந்த அறிவு தனக்கு ஏற்பட்டுள்ளதாக முழுமையாக நம்ப வேண்டும். பிறர் போல தாம் இல்லையே என்ற ஏக்கம் மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவரவருக்கான வாழ்க்கை புத்தகம் தனித்தனியாக அச்சடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பூரணமாக ஒப்புக் கொள்ளுதல் வேண்டும். வாழ்ந்தாக வேண்டும், வேறு வழி இல்லை என வாழாமல், சிறப்பாக வாழ ஆயிரம் வழி உண்டு என எண்ணி உற்சாகம் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து இறையிடம் சரணாகதி அடைவதே சிறந்த வழி என்பதை பூரணமாக உணர வேண்டும். யாருக்கும...

குடும்ப உழவுகள்

 *குடும்ப உறவுகள்* தாத்தா என்றொரு உறவு தாளாத பெருமையை தரும் பாட்டி என்றொரு உறவு பாசத்தை மிகையாய் கொட்டும் அம்மா என்றொரு உறவு அன்பை மட்டுமே காட்டும் அப்பா என்றொரு உறவு அகிலத்தை நமக்குச் சொல்லும் அண்ணன் என்றொரு உறவு அனைத்தையும் கொடுத்து உதவும் அக்காள் என்றொரு உறவு அம்மா போல் நின்று வழிநடத்தும் தம்பி என்றொரு உறவு தனக்காக எதுவும் செய்யும் மாமா என்றொரு உறவு மாட்சிமை பெற்று தரும் அத்தை என்றொரு உறவு அத்தனை அன்பை கொடுக்கும் இப்போது கூட்டு குடும்பம் இல்லையே - மனம் புழுங்கி தனியாய் கிடந்து தவிக்கிறோம்

ஒரு மகளை அதிகம் நேசிக்கும் தகப்பன்

 தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!! தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று... ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்... ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்... பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்... மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்... அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்ற...

பழைய ஆசிரியரை சந்திக்கும் சரணம்

 ஒரு இளைஞன், சென்றிருந்த திருமண நிகழ்ச்சியில்,... தன் பழைய ஆசிரியரை,.. தேடிப்போய் சந்திக்கிறான். ----------------------- "என்னை தெரிகிறதா சார்?" "தெரியலையே தம்பி...!" (தானே அறிமுகம் செய்துகொண்ட பின்..) “ஆஹா,.. நீ என் பழைய மாணவன்.. இல்லையா?" “ஆமாம் சார்..." “க்ரேட்... உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு,.. எப்படி இருக்கே,.. உன் வாழ்க்கை எப்படி போகுது,.. இப்போ என்ன பண்றே,..!" “சார்,.. நான் இப்போ ஒரு ஆசிரியரா வேலை செய்துக்கிட்டு இருக்கேன்..!” “பிரமாதம்... நீயும் இப்போ, என்னைப் போல ஒரு ஆசிரியன்! வாவ்! .. சரி,.. உன்னை ஒரு ஆசிரியராகனும்னு தூண்டியது எது?” “என்னை ஒரு ஆசிரியராக பணி புரிய தூண்டியது,.. நீங்கதான் சார்!” “நானா?,.. நான் எப்படி உன்னை,…?” “உங்கள் பாதிப்பு தான் சார்,.. காரணம்! ” “நான் உன்னை,… எப்படி பாதித்தேன்?" “சொல்றேன் சார்... அவ்ளோ பெரிய விஷயம் அது! ஆனா உங்களுக்கே அந்த நிகழ்வு நிச்சயம் ஞாபகம் இருக்கும். ஒரு நாள்,.. க்ளாஸ்ல ஒரு பையன் ஒரு அழகான வாட்ச் கட்டிக்கிட்டு வந்தான்! என்னால அது மாதிரி ஒண்ணு வாங்க முடியாது... ஆனா,.. எனக்கு அவ்வளவு ஆசை,.. அந்...

மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்

 ஒரு முறை மகாகவி காளிதாசர்.          வயல்வெளியே, வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!                    சற்று தூரத்தில் ஒரு கிராம பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!                    காளிதாசர் அவரை பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார் .               அந்த கிராமத்து பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் என்றாள்!                  உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!  உடன் அந்த பெண்,                    உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! ....     ...