இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.
இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும். ஆணழகன் அப்பாவிற்கு_அழத்தெரியாது!! ⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்! ⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்! என்னடா வாழ்க்கை இது என ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்! ⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து! ⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து! ⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து! போகும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போதும்! தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்! நாம்_அவரை_கல்லெனவே நினைத்துவிட்டோம்! ⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்! ⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்! ⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள் சொற்பம் என்போம்! ஆனால், தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்! நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்! தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும்_ஜீவன்_அது! ⚽ நாம் திண்ணும் சோறும்! ⚽ உடுத்தும் உடையும்! ⚽ படித்த படிப்பும்! அப்பாவின் வேர்வையில்தான் என ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை! நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்! ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமைய...