இடுகைகள்

ஜூலை 21, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயல்பு வாழ்க்கையின் மூன்று விஷகியம்

1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👌👇📢👊 👉 நேரம் 👉 இறப்பு 👉 வாடிக்கையளர்கள் 2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும். 👉 நகை 👉 பணம் 👉 சொத்து 3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது. 👉 புத்தி 👉 கல்வி 👉 நற்பண்புகள் 4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம். 👉 உண்மை 👉 கடமை 👉 இறப்பு 5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை. 👉 வில்லிலிருந்து அம்பு 👉 வாயிலிருந்து சொல் 👉 உடலிலிருந்து உயிர் 6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும். 👉 தாய் 👉 தந்தை 👉 இளமை 7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு. 👉 இறைவன்  👉 தாய்  👉 தந்தை நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் : 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள் : 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும் 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேச...

பக்கவாதம் குணப்படுத்த சித்த வைத்தியம்

மூல நோய்க்கு சித்தா, ஆயுர்வேத வைத்தியம்.  அறுவை சிகிச்சை தேவையில்லை.  மூலநோய் வருவது ஏன்? நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். மூலநோய்க்கு முக்கியக் காரணம்.   1) மலச்சிக்கலின்போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும். 2)ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது. 3) வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும். 4). கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ...

சிறந்த தொழிலாளர் jackma

உலகின் சிறந்த வெற்றியாளர்களில் ஒருவரான #ஜாக்_மா (Jack Ma) கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள். Jack Ma is the founder and executive chairman of #Alibaba Group of company. Chinese business magnate and philanthropist.  © #AJ_Marketing & #Services © 1. புறக்கணிப்பை பயன்படுத்துங்கள். 2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).  3. குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.  4. உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். 5.  உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள்.  6.  ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள். 7.  உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள். 8.  முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள். 9.  நிறுவனத்தின்  மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். 10. உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.

குருட்டுதயின் கதை நெஞ்சை அள்ளும் கதை

#ஓர்_குறுட்டுத்தாயின்_கடிதம்! அன்பின் மகனே!..  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன். மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது. உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்! மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று! அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெ...

பக்கவாதம் வராமல் தவிர்க்க

*பக்கவாதம் வராமல் தவிர்க்க* 1. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள். அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (மருத்துவர்கள் பரிந்துரைத்த) மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 2. மது குடிக்காதீர்கள் - புகை பிடிக்காதீர்கள். புகைபிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையானது ரத்தக் குழாய் சுவற்றைத் தாக்குகிறது. ரத்தம் உறைதலை விரைவாக்குகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதயம் அதிகமாகச் செயல்படும்படி தூண்டுகிறது. மது அருந்துவதும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 3. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள். சர்க்கரை நோயானது உடலின் எல்லா பகுதியிலும் உள்ள சின்ன ரத்தக் குழாய் முதல் பெரிய ரத்தக் குழாய் வரையிலும் பாதிக்கும். இது அடைப்பு மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்திவிடலாம். 4. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். சமச்சீரான உணவுக்குப் பழங்கள், சிறுதானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உயரத்துக...

நீதிபதியின் கதை

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார்.  தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார்.  ``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார்.  '``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார்.  உடனே அந்த மாஜிஸ்திரேட்  ``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார்.  ``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன்.  ``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு.  அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட்.  மகாஜன் வெளியில் வந்தார்! மெகர் சந்த் மகாஜன் * சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை.  அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்கா...