இல்லறம் துயரம்..


கணவன்: ஓய்.. இங்க பாரு, 


கொஞ்சம் திரும்பி படு..


மனைவி: அதெல்லாம் முடியாது, 


எனக்கு தூக்கம் வருது...


கணவன்: இப்போ நான் என்ன கேட்டேன் ? 


உன்கிட்ட  கொஞ்சம் பேசணும்.


மனைவி: அதுக்கு இப்போ தான் நேரம் கிடைச்சாதா? பேசாம தூங்குறிங்களா இல்லையா..


கணவன்:  வேற எப்போ தான்  உன்கிட்ட  பேசுறது? 


மனைவி: நான் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும் . என்ன தூங்க விடுங்க..


கணவன்: இல்லடி கொஞ்சம் திரும்பி தான் பாரேன்.


மனைவி: உங்களை பற்றி எனக்கு தெரியும், 


நான் ஒன்னும் மெஷின் இல்ல, சரியா? 


இப்போ தூங்குறிங்களா இல்லையா?


கணவன்: என்னடி இப்படி பேசுற, 


உனக்கு என்னதான் அப்படி பிரச்சனை?


மனைவி: எப்படிங்க இப்படி வாய் கூசாம கேக்க முடியுது?


என்னை  கலயாணம் பண்ணிக்கிட்டதிலிருந்து 

அப்படி என்ன பெருசா பண்ணிட்டிங்க?


எல்லோர்  மாதிரியும் தினமும்  வெளிய கூட்டிட்டு போங்கன்னு அடம் பிடிக்கிறேனா?


எனக்கு அது இது வேணும்ன்னா தினமுமா கேக்குறேன்?


வருஷத்துக்கு ஒரு நாள் தீபாவளி வருதுனு  தானே கேக்குறேன். 


அதைக்கூட வாங்கி தர  மாட்டிங்களா?


நானும் மனுஷி தான் புரிஞ்சுக்கோங்க..


சத்தியமாக அவனிடம் இதற்கு விடை இல்லை..


கணவன்: சரி தூங்கு..


மனைவி:  நாய் மாதிரி  நான் கத்திட்டுருக்கேன்.. 


தூங்க சொல்றிங்களா?


கணவன்: இப்போ என்னதாண்டி என்ன பண்ண சொல்ற? 


நான் தனியார் கம்பெனியில் மாச சம்பளம் வாங்குறவன்.


பிசினஸ் பண்ணல!


எப்போ வேலை  போகும்னே தெரியாது. 


வெளியே  போகச்  சொன்னா வர வேண்டியது தான். 


ஒரு மாசம் என் சம்பளம் இல்லைனா என்ன ஆகும் தெரியுமா? 


நான் என்ன அப்படி பெருசா தப்பு பண்ணிட்டேன்? 


பைக் வேண்டாம்  


பையன வச்சுட்டு வெளியே போக முடியலைன்னு சொன்ன.. 


லோன் போட்டு கார் வாங்குனேன்.


வாடகை வீட்ல இருந்தா உங்க வீட்ல மதிக்க மாட்டாங்கன்னு சொன்ன.. 


சரி  இருந்த பணத்தையெல்லாம்  போட்டு இந்த பிளாட் வாங்கினேன். 


இதுக்கு மேல 


அப்பா.. அம்மா.. ஹாஸ்பிடல் செலவு ..  


வீட்டு செலவு  பிள்ளைகள் படிப்பு  இதையும் பார்க்கணும்.


ஒரு மாசம் லோன்க்கு மட்டும் எவ்வளோ போகுதுன்னு தெரியுமா? 


என்னைக்காவது கேட்டிருக்கியா? 


இல்லை  என்ன பண்ண போறீங்கன்னு ஏதும் டிஸ்கஸ் பண்ணிருக்கியா? 


ஒன்னுமே  இல்ல.  


நானும் நீ கஷ்டப்படுவேன்னு ஏதும் சொல்றது இல்ல. 


சம்பளம் போட்ட மறுநாளே தீர்ந்துபோய் கடன் வாங்கவேண்டியதாய் இருக்கு ..


உனக்கு எப்படி என் கஷ்டம் புரியும்!


உங்க வீட்டில்  ஏதும் குடுத்து உதவ போறாங்களா? 


நான் தான எல்லாத்தையும்  பார்க்கணும்.


தீபாவளிக்கு மட்டுமல்ல எப்பவுமே  நீ கேட்டதையெல்லாம் வாங்கி தரணும்னு எனக்கும்  ஆசை தான்.


உன்னையும் பிள்ளைகளையும் அடிக்கடி  வெளியே  கூட்டிட்டு  போகணும்னு எவ்வளோ ஆசை தெரியுமா?  


எனக்கும் ஆசை இருக்காதா? 


நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு.


நம்ம பிள்ளைகளோட எதிர்காலத்துக்கு  சேர்த்து வைக்கணும். 


நல்லா படிக்க வைக்கணும். 


ஒரு நல்ல அப்பாவா இருக்கணும்னு எவளோ கஷ்டப்படறேன் தெரியுமா? 


பெத்தவங்களுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும்.


கட்டிய மனைவியா சந்தோசமா  வச்சிக்கணும்னு எவ்வளோ போராடுறேன் தெரியுமா ?


இப்போது அவளிடம் விடை இல்லை..


இதில் யாரை தப்பு சொல்வது? 


யார் மீது குற்றம் சுமத்துவது?


திருமணத்திற்கு பிறகு ஒவ்வொருவரும்  கிணற்றில் தள்ளிவிடப்பட்டு அவர்களாகவே நீச்சல் கற்றுகொள்கிறார்கள். 


இதில் கரை சேர்வோரும் உண்டு. 


மூச்சு முட்டி மூழ்குவோரும் உண்டு.


ஒரு குடும்பத்தில் தனக்கானவர்களுக்காக சின்ன சின்ன தியாகம் செய்து  வாழ்வது இன்பம் என்பதை கணவன் மனைவி இருவரும் உணரும் போதுதான்  


அது இல்லறம்.


இல்லையேல் 


அது துறவறம்...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு