இடுகைகள்

ஏப்ரல் 28, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளரிக்காய நன்மைகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு அறிந்தால் இதன் பலன்களை முழுமையாய் பெறுவோம். * கோடை என்றாலே உடலில் நீர் சத்து எளிதில் குறையும். இதனால் உடலின் கழிவுப்பொருள் வெளியேற்றத்தில் பிரச்சினை ஏற்படலாம் வெள்ளரியில் நார்சத்தும், நீர் சத்தும் அதிகம் என்பதால் இந்த பிரச்சினை இருக்காது. * வெள்ளரி சிறுநீரக பாதை பிரச்சினைகளை தீர்க்க உதவும். வெள்ளரி சாறு இருவேளை குடித்தால் போதும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்து விடும். சிறுநீரகத்தின் அழுத்தத்தினை குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாய் வைக்கும். * வெள்ளரிக்காய்க்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் இவைகளை நீக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் இதன் சாறு எடுத்துக் கொள்ள இப்பிரச்சினைகள் தீரும் ஜீரண சக்தி கூடும். * வெள்ளரி குடலிலுள்ள நாடா பூச்சிகளை நீக்கும். இதிலுள்ள எகிப்ஸின் என்ற...

ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் பிடிக்கப் பழகினான். பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான். தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால் பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான். இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான். கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.பெற்றோரைச் சந்திக்க விரும்பினான்.பெற்றோரும் வந்தனர்.கதறினர்.போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர், மகன் அமைதியாகச் சொன்னான். "அவர்கள் காரணமில்லை, நீங்கள்தான் " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து மிரட...

கணவன் எழுதிய கவிதை

*அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது* நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன் நீ நெருப்புப் புகையோடு போராடிக் கொண்டிருக்கிறாய்.  நான் பல் துலக்குகிறேன் நீ பாத்திரங்களை புதுப்பிக்கிறாய்.  நான் செய்தித்தாளில் செய்திகளை சேகரிக்கிறேன்.  நீ வீட்டில் குப்பைகளை பெருக்குகிறாய்.  நான் உடலை சுத்தம் செய்கிறேன்.  நீ ஆடைகளின் அழுக்குகளை பிரித்துக் கொண்டிருக்கிறாய்.  நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.  நீ பாத்திரங்களை நீரால் நிரப்புகிறாய்.  நான் அலுவலகம் கிளம்புகிறேன்.  நீ பிள்ளைகளை சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய்.  நான் இரவு வீடு திரும்புகிறேன்.  நீ இன்னும் திரும்பவில்லை சமையலறையிலிருந்து.  நான் தூங்கச்செல்கிறேன்.  நீ கதவின் தாழ்ப்பாள்களையும் எரியும் மின்விளக்குகளையும் பிள்ளைகளின் போர்வைகளையும் சரிபார்த்து விட்டே படுக்கையில் விழுகிறாய்.  ஒவ்வொரு ஞாயிறுகளும் ஒவ்வொரு பண்டிகைகளும் எங்களுக்கு ஓய்வு நாட்கள் உனக்கு? உறவு வீட்டு விழாக்களில் எங்களிடத்தில் நீ! கல்விக்கூடங்களின் கேள்விகளுக்கான பதில் நீ! சோக ந...

கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்காக வாழ வேண்டும்.

1.மனைவி பொருப்புதாரியாக இருக்க வேண்டும் -கணவன் திருப்தியுடன் மௌத்தானால் சொர்க்கம் கிடைக்கும். கணவனுக்கு அதிக சுமை ஏற்படுத்த கூடாது -வருமானத்திற்கேற்ப, சக்திகேற்ப வாழ்க்கை நடத்த வேண்டும். 2.ஆசைகள் , அனாவசிய தேவைகள் குறைத்தல். 3.தேவைகளை தொடர்ந்து கேட்டுகொண்டே இருத்தல் கூடாது.  4.கனவன் மனதில் மனைவியை பற்றிய மாற்றத்தை கெடுக்க கூடாது- நடத்தை, பேச்சு, ஆடை, அனைத்திலும் கணவன் மனைவியை பார்க்கும்போது சந்தோசத்தையும்,நட்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.கணவனிடம் மட்டும் தனது அழங்காரம் காட்ட வேண்டும்.  5.கணவனிடம் எல்லாமே இருக்கனும் நினைக்காதீங்க,குரைத்துக்கொள்(comparison,expectations). 6.கணவன் இருக்கும்போது வேலைகளை குறைக்க வேண்டும். 7. வீட்டை அழகாகவும்,சுத்தமாகவும் வைத்தல்,கணவன் அறையை சுத்தமாக வைக்க வேண்டும்.தீனில் சுத்தம் மிக முக்கிமான சுன்னத் 8.மனைவியிடம் இருக்கும் திறமை,நல்ல தன்மை, கணவனிடம் வெளிப்படுத்தி தெரிவிக்க வேண்டும். 9.கணவனிடம் இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்துக்க வேண்டும். 10.கணவனின் சூழ்நிலைகேற்ப தனது பிரச்சனைகளை பகிர்தல், 11.மனைவியான பின் உன்னுடைய நேரத்தை நன்பர்களிடம் செலவழிப்பது,...

கருவேப்பிலை பயன்கள்

*கறிவேப்பிலை இருக்க, கவலை எதற்கு?* காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும். நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். சளித் தேக்கத்தில் இரு...