இறைவனின் கோபம்
*இறைவனின் கோபம்..!* ××××××××××××××× புழுவின் கோபம் திமிர்தலோடு சரி... பறவையின் கோபம் கீறுதலோடு சரி... மிருகத்தின் கோபம் முட்டுதலோடு சரி... மனிதனின் கோபம் அன்றோடு சரி.... இறைவனின் கோபம் என்று முடியுமோ..? இறைவா....! உன் கோபத்தின் உச்சம்- கோயிலை மூடினாய்... மசூதியை மூடினாய்.. ஆலயத்தை மூடினாய்... வீடுகளை மூடினாய்.... உலகையே மூடினாய்...! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்.... ஊதியத்தை நிறுத்தினாய்... பழகுதலை நிறுத்தினாய்... ஒருவரை ஒருவர்- பார்த்தலையும் நிறுத்தினாய்.. மொத்தத்தில்- இயக்கத்தையே நிறுத்தினாய்...! இறைவனே...! தவறுதான்...! ஆணவம் அடைந்தோம்.. கர்வத்தில் மிதந்தோம்... உண்மையை மறந்தோம்... நன்மையை மறந்தோம்.... பொதுநலம் மறந்தோம்.... சுயநலம் மிகுந்தோம்... தவறுதான்...! இறைவா....! புனிதம் துறந்தோம்... மனிதம் மறந்தோம்... ஊரை மறந்தோம்.. உறவை மறந்தோம்... பெற்றோரையே- மதிக்க மறந்தோம்.. இறைவா உன்னையே- துதிக்க மறந்தோம்...! தவறுதான்.... தவறேதான்...! கூட்டுக்குள் முடங்கிய புழுவினைப் போலே வீட்டுக்குள் முடங்கினோம்.. கண்ணுக்குத் தெரியா இறைவனே...! உள்ளுக்குள் எங்களை சிறை வைத்தாயே.... மண்ணுக்குள் எங்களைப் புத...