தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

 *தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)* 


*சுதந்திரத்திற்கு முன்* 

1. சுப்பாராய ரெட்டி (1920 -21)

2. பனகல் ராஜா (1921 - 26) (இராமராய லிங்கர்) 

3. டாக்டர் பி. சுப்பாராயன் (1924 - 30) (சுயேட்சை)

4. முனிசாமி நாயுடு (1930 - 32)

5. பொப்பிலி ராஜா (1932 - 37) (இராமகிருஷ்ண ரங்கா ராவ்)

6. பி.டி ராஜன் (1936) இடைக்கால முதல்வர்

7. வெங்கட ரெட்டி நாயுடு (1937) இடைக்கால முதல்வர்

8. இராஜாஜி (1937 - 39) காங்கிரஸ் அமைச்சரவை.‌ (1935 இந்திய கவுன்சில் சட்டம்) 

9. கவர்னர் ஆட்சி (நவ 1939 - ஏப்ரல் 1946) 

10. டி. பிரகாசம் (ஏப்ரல் 1946 - மார்ச் 1947)

11. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (மார்ச் 1947 - ஏப்ரல் 1949) 

12. பி.எஸ். குமாரசாமி ராஜா (ஏப்ரல் 1949 - ஜனவரி 1952) 


*சுதந்திரத்திற்கு பின்* 

1. இராஜாஜி (ஏப்ரல் 1952 - ஏப்ரல் 1954) (இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 1952ல் நடைபெற்ற தேர்தல் மூலம் முதல்வர் தேர்வு)

2. காமராசர் (ஏப்ரல் 1954 - அக்டோபர் 1963) 

3. எம். பக்தவத்சலம் (அக்டோபர் 1963 - 1967)

4. சி.என் அண்ணாத்துரை (1967 1969) திமுக 

5. மு‌ கருணாநிதி (10 பிப்ரவரி 1969 - 71) 

6. மு. கருணாநிதி (1971 - 76) 

7. எம்.ஜி. ராமச்சந்திரன் (1977 - 80) (1980 ஆட்சி கலைக்கப்பட்டது - குடியரசு தலைவர் ஆட்சி) 

8. எம்.ஜி. ராமச்சந்திரன் (1980 - 85) அதிமுக

9. எம்.ஜக ராமச்சந்திரன் (1985 - 87) 

10. ஜானகி (7 - 30 ஜனவரி 1988) 

11. மு. கருணாநிதி (1989 - 91) (21 மே 1991 இராஜிவ் காந்தி இறப்பினை காரணம் காட்டி ஆட்சி கலைப்பு) குடியரசு தலைவர் ஆட்சி. 

12. ஜெயலலிதா (1991 - 96) அதிமுக

13. மு. கருணாநிதி (1996 - 2001) 

14. ஜெயலலிதா (மே - செப்டம்பர் 2001) தொடர்ந்து 

15. பன்னீர் செல்வம் (செப்டம்பர் 2001 - மார்ச் 2002) 

16. ஜெயலலிதா (2002 - 2006) 

17. மு. கருணாநிதி (2006 - 2011) 

18. ஜெயலலிதா (2011 - 2014)

19. பன்னீர் செல்வம் (2014 - 15)

20. ஜெயலலிதா (மே - செப்டம்பர் 2016) 

21. பன்னீர் செல்வம் (செப்டம்பர் 2016 - பிப்ரவரி 2017)

22. எடப்பாடி பழனிச்சாமி (பிப்ரவரி 2017 - மே 2021) 

23. ஸ்டாலின் (மே 2021 - தற்போது) (16வது சட்டமன்றத் தேர்தல்) 


----×-----×--- 


*தமிழ்நாடு அரசின் சமுக நல திட்டங்கள்* 


*இராஜாஜி ஆட்சி* 

1. விற்பனை வரியை அறிமுகம் செய்தார் (1937)

2. குலக்கல்வித் திட்டம் அறிமுகம் (1953);

3. மதுவிலக்கு அறிமுகம் (1953) 

4. ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். 


----×----- 


*பொது வினா விடைகள்*  


1. தமிழகத்தில் உள்ள பயோஸ்பியர் - நீலகிரி(இந்தியாவின் முதல் பயோஸ்பியர்), அகத்திய மலை, மன்னார் வளைகுடா(முதல் கடல்வாழ் உயிர்கோள் காப்பகம்.‌

2. 1965 ஆண்டு தொகுதி சீரமைப்பு சட்டப்படி தமிழத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளாக உயர்த்தப்பட்டது. 

3. பா.ம.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989 (டாக்டர் இராமதாஸ்) 

4. திராவிடர் கழகம் 1944ல் தோற்றுவிக்கப்பட்டது. 

5. தேமுதிக தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 2005.

6. மதிமுக தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1994. 

7. சமக தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 2007. 

8. இந்து முன்னேற்ற மேன்மல சங்கத்தை தமிழ்நாட்டில் 1853ல் தோற்றுவித்தவர் - சீனிவாசகம் பிள்ளை. 

9. உள்ளாட்சி தினம் நவம்பர் 1. 

10. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் - ஏப்ரல் 24. 

11. அறிஞர் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1978 (பொறியலுக்கென இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்) 

12. காந்தி கிராமிய பல்கலைகழகம் - திண்டுக்கல் (1976) 

13. அண்ணாமலை பல்கலைக்கழகம் - 1929 (தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் தனியார் பல்கலைக்கழகம். தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.) 

14. தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைக்கழகம் 1887. 

15. வெங்கட்ராம கிருஷ்ணன் வேதியியல் துறைக்கு 2009ல் நோபல் பரிசு பெற்றவர். 

16. சர்.சி.வி ராமன் 1930ல் நோபல் பரிசு பெற்றார். (இராமன் விளைவு) சந்திர சேகர வெங்கட்ராமன் - திருவானைக்காவல் அருகே மாங்குடி கிராமம். 

17. எஸ். சந்திர சேகர் 1983 இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.‌

19. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் - அகிலன்(சித்திரபாவை என்ற நூலுக்கு 1975ல் பெற்றார்) 

20. உலக செஸ் சாம்பியன் பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த். 

21. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் - செல்வி ஃபாத்திமா பீவி.‌

22. தமிழ் நாட்டின் முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேஸ் துரை

23. தமிழகத்தின் முதல் பெண் மேயர் - தாராச் செரியன். 

24. முதல் பெண் ஐபிஎஸ் - திலகவதி (கல்மரம் என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார்) 

25. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலாளர் - லட்சுமி பிரானேஷ்.

26. அப்துல்கலாம் பாரத் ரத்னா விருது பெற்ற ஆண்டு - 1997. சுப்பிரமணியம் சுப்புலட்சுமி - 1998

27. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931) 

28. தமிழில் வெளிவந்த முதல் ஊமைப்படம் - கீசகவதம் (1917) 

29. தமிழகத்தில் முதல் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம் - கோயம்புத்தூர் (2010) செம்மொழி என்று 2004ல் தமிழ் அறிவிக்கப்பட்டது.

30. மத்திய செம்மொழி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்ட இடம் - சென்னை (2007)

31. தமிழ் மொழி மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன் என்று கூறியவர் - மகாத்மா காந்தி. 

32. ஜெயகாந்தன் ஞானபீட விருது பெற்ற ஆண்டு - 2002(எழுத்துத்துறையில் புரிந்த சாதனைக்காக) 

33. தமிழகத்தில் முதல் முதலில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் - ரா.பி சேதுபிள்ளை - தமிழ் இன்பம் (1955)

34. தமிழ்நாடு அரசு சமூக நல வாரியம் அமைத்த ஆண்டு - 1954. (மத்திய சமூக நல வாரியம் 1953) 

35. சுதந்திர சங்கு பத்திரிக்கையின் ஆசிரியர் - சங்கு கணேசன். 

36. மணிக்கொடி இதழின் ஆசிரியர் - சீனிவாசன். 

37. விமோசனம் பத்திரிகையின் ஆசிரியர் - இராஜாஜி (மதுவிலக்குக்காக ஆரம்பித்தார்) 

38. ஸ்ரீரங்கம் காவேரிக்கும் கொள்ளிடத்திற்கு நடுவே அமைந்துள்ள தீவு. 

39. தமிழகத்தில் கிணற்று நீர் பாசனம் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து கால்வாய், ஏரி பாசனம். 

40. தமிழ்நாட்டின் முதல் கூட்டு துறை திட்டம் ஜெயம் கொண்டம் 

41. தமிழகத்தின் முதல் அனல்மின் திட்டம் - நெய்வேலி. 

42. தமிழகத்தில் கடல் அலை மூலம் மின்சக்தி தயாரிக்கும் இடம் - குலசேகர பட்டிணம் தூத்துக்குடி (இஸ்ரோவின் ராக்கெட் ஏவுகள தளம் அமைக்கப்படும்) 

43. இந்தியாவில் முதல் முறையாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - மீஞ்சூரை அடுத்துள்ள காட்டுப்பள்ளி. 


---×---×-- 


* தமிழகத்தின் மொத்த பரப்பளவு - 1,30,058 ச.கிமி 

* காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் ஆகிய 5 கோவில்களின் கோபுரங்கள் தமிழக அரசு முத்திரைக்காக தேர்வு செய்யப்பட்டன. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தேர்வு செய்யப்பட்டது. 

* கடைசி ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் பிரான்சிஸ் நான்ஸி. 

* இதுவரை தமிழகத்தில் 1976‌, 80, 88, 1991 ஆகிய ஆண்டுகளில்‌ குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது.


தமிழும் போட்டித்தேர்வும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு