இடுகைகள்

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே

 சிறந்த சிறுகதை :  வாசித்துத்தான் பாருங்களேன்! “#உனக்கு_தகுதி_இல்லாத_இடத்தில்_நீ_இருக்காதே”     ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன்மகனை அழைத்து சொன்னார் , " மகனே , இது உனது பூட்டனின் கைக்கடிகாரம் , 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது , நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , இது பழையது என்பதால் 1000 ரூபா மட்டுமே தர முடியும் என்கின்றனர் , என்றான் .      தந்தை பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு , தந்தையிடம் இதற்கு 5000 ம் ரூபாதான் தர முடியும் என்கின்றனர் என்றான் .      தந்தை ‘இதனை நூதனசாலைக்கு ( Museum ) கொண்டு சென்று விலையை கேட்டுப்பார்’ என்றார் ... அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , நான் அங்கு போன போது , அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து , பரிசோதித்துவிட்டு , என்னிடம் இதற்கான பெறுமதி நூறு மில்லியன் என்கின்றனர் என்றான் .....

அன்பே உணரதவர்களுக்கான குட்டி கதை

அன்பை உணராதவர்கள் இக்குட்டிக்கதையை வாசித்துச் சாகட்டும்! ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது.  அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான். இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன். “பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒர...

பொய் சொல்லும் பழக்கம் யாரால் வந்தது?

பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் அதிகமாக இருக்கும்... பொய்யினைப் போலவே ''பொறாமை''யும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டு உள்ளது... பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்... வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள்... இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்... இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ!, அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அவர் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் உற்று நோக்குவர்... தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் மகிழ்ச்சியை விட அவர்களுக்குத் துன்பம் நேரும் பொழுது மகிழ்ச்சி கொள்வார்கள். பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள், இன்னும் கூடவே இருப்பவர்கள் தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள்... பாடசாலை மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை குணம் உள்ளவர்கள் இருக்க...

இந்த பதிவு எழுதும் போது எனது வலியும் கண்ணீரும்

Dr Karthik bala இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் ! மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதிற்கில்லை என்பதால், அந்த மருத்துவரே மதுரைக்கு கொண்டு செல்ல கூறினார். மதுரையின் பிரபல தனியார்  மருத்துவமனையில்  இதை பற்றி நான் வினவ, patient ஐ அழைத்து வருமாறு கூறினார்கள். Icu வில் பெட் இருப்பதாகவும் அட்மிட் செய்து கொள்கிறோம் என்று கூற என் மாமா ஆம்புலன்ஸில் அங்கே அழைத்து வர பட்டார்கள்.  ஆனால் வந்ததும் இவ்...

இயல்பியால் ஆசிரியர் மற்றும் மாணவர் கதை

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. "நிறுத்துவதற்கு" “வேகத்தைக் குறைப்பதற்கு" “மோதலைத் தவிர்ப்பதற்கு " "மெதுவாக செல்வதற்கு" "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும...

சில உளவியல் உண்மை

சில உளவியல் உண்மைகள்! 1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. 4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.. 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!! பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! 3 மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .. 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.. 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். . 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக...

இளம் வயது மகளின் அரை

இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார்.  அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.  அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் குமாருடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். குமாரின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது.  நீங்கள் குமாரைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க குமார் விரும்பவில்லை. குமாருக்கும் எ...

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

யார் இந்த பேராசிரியர் கபில பெரேரா?? தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்! மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்த வருடம் ஒரு 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த. தமிழ்மொழி பரீட்சையாகும். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி வந்தது தந்தை-மகன் இருவருமாகும். அவர்கள் இருவரில் ஒருவர் நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரியினால் நிறுத்தப்படுகின்றார். இது ஒரு பரீட்சை நிலையமாகும். உங்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. பரீட்சைக்கு தோற்றும் மகனை மாத்திரம் உள்ளே அனுமதிக்கலாம் எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியது பிள்ளைகள் அல்லாது பெற்றோர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதனாலாயிருக்க வேண்டும். ஆனால் தானும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதாக அத் தந்தை தனது கையில் வைத்திருந்த அனுமதிப் பத்திரத்தைக் காட்டியவாறு கூறினார். அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரி அவரை உள்ளே செல்ல அனுமதித்தார். உள்ளே சென்று பரீட்சை மண்டபத்தில் அமர்ந்த அவர் யார் எவர் என்று மேற்பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்ல...

அன்றாட வகிழ்க்கையின் கலப்பட பொருள்

 நீங்கள் அன்றாடம் சாப்பிடும் கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி என்ன ! ... பெரின்னியல் (pernnial plant)   என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறு மரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடி வைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்து விடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும் வரை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். இரு வகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ் சிவப்பான பிசினும் கருப்ப...

பயணியின் விவாதம்

*பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம்.* *எவ்வளவு?* *என்று கேட்டார்* 300-ரூபாய் .. 200-ரூபாய்க்கு வருமா ?  சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... ஆட்டோ பறந்தது... அண்ணே இந்த வழியா போனா #நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...? #ரோட்டுக்கடைதான் சார்  அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம்   இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.. ஒரு நடுத்தரவயது அம்மா... அவரது நெற்றிமற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது  வாங்க  இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார்,  ஆட்டோ டிரைவர். இட்லி, தோசை, புரோட்டா என கட்டினோம்... எவ்ளோம்மா ?. 60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க 100-ரூபாய் கொடுத்தேன்... மீதியை... சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா... இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க... சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்...  அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி புறப்பட்டனர்... சார...

வகுப்பறையில் நடந்த சிறிய கதை

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து.. ஒவ்வொருவரையும்.. வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார். ஒரு பெயருக்கும்.. அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் ! மாணவர்கள் எழுதி முடித்தவுடன்.. டீச்சர் சொல்கிறார்.. “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே.. அவர்களிடம் நீங்கள் காணும்.. உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.” மாணவர்கள் ஒவ்வொருவரும்.. யோசித்து.. தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர். வாரக் கடைசி டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து.. அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு.. மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்... மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள்... 10 நிமிடங்கள் வகுப்பறையே சந்தோஷக்கடலில் மிதக்கிறது.. “நான் இவ்வளவு சிறப்பானவனா..? என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்க...

சமையலில் சய்யக்கூடாதவை

#சமையலில்_செய்யக்கூடாதவை. * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால...

மஸ்ஜிதுக்கு வர நேரம் இல்லை

 ஒரு அரசர் மஸ்ஜிதை கடந்து செல்கிறார். மஸ்ஜிதில் பாங்கு சொல்லப்பட்டது;  தொழுகைக்காக யாரும் வரவில்லை என்றவுடன்.... முஅத்தினிடத்தில் மீண்டும் தொழுகைக்காக  பாங்கு சொல்ல அரசர் உத்தரவிடுகிறார்.  பாங்கும் சொல்லப்பட்டது. உடனே மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரே கூச்சல் குழப்பம் ஆகிவிட்டது. முஅத்தினிடத்தில் "இரண்டாவது தடவை எப்படி பாங்கு சொல்லலாம்?  இது மார்க்கத்தில் அனுமதி உண்டா?" என்று கேள்வி கேட்டு சண்டையிட ஆரம்பித்து விட்டார்கள்.  தொழுகையை விட அனுமதி உண்டா, என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை; ஆனால் இரண்டாவது தடவை எப்படி பாங்கு சொல்லலாம் என்ற கேள்விதான் மிகைத்திருந்தது... இது தான் இன்று நம் சமூக நிலைமை , பாங்கு சொன்னவுடன் தொழுகைக்கு வர நமக்கு நேரம் இல்லை..... ஆனால் கேள்வி கேட்க, சண்டை சச்சரவு செய்ய பல மணி நேரம் இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக...!

இதயத்தை பையில் சுமைக்கும் பெண்

இதயத்தை பையில் சுமக்கும் (இதயமில்லா) பெண். உண்மை என்ன? இயந்திரம் 90 வினாடிகள் இயங்க மறுத்தால் உயிர் பிரியும் ஆபத்து. Selva Hussain எனும் 39 வயதுடைய பெண் செயற்கை இதயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 2018 இல் நிகழ்ந்த சத்திர சிகிச்சை பற்றி சமீப நாட்களாக தமிழ் ஊடகங்களில் செய்திகளை காண கிடைக்கிறது. அதுபற்றிய விளக்கமான பதிவே இது. தமிழில்: Dr Ziyad Aia 2 பிள்ளைகளின் தாயான Selwa Hussain பிரித்தானியாவில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபராகும்.  இதற்கு முன்னர் 2011 இல் 50 வயதுடைய ஒரு ஆண் Papworth Hospital, Cambridge இல் செயற்கை இதயம் பொருத்தப்பட்டார். 2 ஆண்டுகளின் பின்னர் அவருக்கு இதய மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை நலமாக வாழ்ந்து வருகிறார். எனவே Selwa Hussain தற்போது செயற்கை இதயத்துடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ஒரே நபர் என கொள்ளலாம். Selwa Hussain க்கு இந்த செயற்கை மாற்று சிகிச்சை இடம்பெற்றது 2017 இன் இறுதிப்பகுதியில். இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவரது வாழ்க்கையை புரட்டிப்போடும் அந்த வரலாறு ஆரம்பிக்கிறது. Selwa Hussain அடிக்கடி கால் வீக்கங்களுக்கு உள்ளாகி ...

என்னைக் கசிவு

கப்பல் தீப்பிடிப்பு; எண்ணெய் கசிவு அனர்த்தத்தை எப்படி எதிர்கொள்வோம்? நமது கிழக்கு கடற்கரை தற்போது வரலாற்றில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. 200,000 மெற்றிக் தொன்களுக்கு அதிகமான எண்ணெய் கடலோர நீரில் கலக்கும் சந்தர்ப்பத்தில் கடல், சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு  இருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற ஜப்பானிய எண்ணெய் டேங்கர் மொரீஷியஸ் தீவுகளில் அருகே மூழ்கியதில் மொரிஷியஸ் கடற்கரையில் 1000-4000  தொன் எண்ணெய் வெளியேறியது. வளர்ந்த நாடுகளைப் போல அந்த எண்ணெயை உறிஞ்சும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லாததால் கடல் நீரிலிருந்து எண்ணெயைப் பிரிக்க உள்ளூர் முறைகளைப் பயன்படுத்தினார்கள். மனித தலைமுடி (இது அதிக எண்ணெயை உறிஞ்சுகிறது), வைக்கோல் மற்றும் கரும்பு இழைகள், மீன் வலைகளில் வைக்கப்பட்டு கடல் மேற்பரப்பில் எண்ணெய் பரவுவதைத் தடுக்கவும், எண்ணெயை உறிஞ்சவும் நீண்ட கடற்பாசிகளையும் பயன்படுத்தினார்கள். அதனோடு மொரிஷியஸ் மீனவர்கள் தங்களது தலைமுடியை வெட்டி அதன் மூலம் இதற்கு பங்களித்தனர். ஏனென்றால் அவர்களின் முடியை விடவும் அவர்களது பிரதான  மீன்பி...

நபியின் மருத்துவ குணம்

நபிமருத்துவம் - வெந்தயம் [Fenugreek] o  நபிமருத்துவம் வெந்தயம் o  வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் o  பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடிய வெந்தயம் o  உடல் மினுமினுப்புக்கு வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். முஸ்லிம்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது. நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்த...

மனிதனின் மனிதாபிமானம்

#மனிதாபிமானம்     “சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். “வீட்லதான் சார்”     “நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.” “இதோ வர்றேன் சார்.” ‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். “ஏங்க பையன் யாரு? என்னாச்சு?” “தெரியல. லாரிக்காரன் இடிச்சுட்டு போயிட்டான்" "அம்புலனசுக்குப் போன் பண்ணியாச்சா?” “அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல” ‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?, அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்' இப்படி பல யோசனைக்கு பி...

கற்பனைக்கத்தை அவசியம் வாசிக்கவும்

கற்பனைக் கதையாயினும் உண்மையை உரக்க கூறிய கதை அரச அலுவலக நடைமுறை ஒரு அரசு அலுவலகத்தின் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பதிவு அறைக்குள்  (Record Room) ஒரு சின்ன இடைவெளி வழியாக ஒரு பாம்பு புகுந்தது.  அதனை, அவ்வலுவலக ஊழியர் ஒருவர் பார்த்து விட்டு, தனது கண்காணிப்பாளரிடம் இவ்வாறு நமது அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்து விட்டது என்று தெரியப்படுத்தினார்.  கண்காணிப்பாளரும், தனது மேல் அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்க நினைத்தார் ஆனால் அதிகாரி அலுவல் விஷயமாக ஒரு வாரம் வெளியூர் சென்று இருந்தார்.  ஒரு வாரம் கழித்து  மேல் அதிகாரி வந்தவுடன், கண்காணிப்பாளர் அவரிடம்,  கடந்த வாரம் தாங்கள் இல்லாத பொழுது நமது அலுவலகத்திற்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது,  அதனைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.  மேலதிகாரியும், "சரி, அந்தப் பாம்பினைப் பிடிக்க வனத்துறைக்கு கடிதம் எழுதுங்கள்" என்று கூறிவிட்டார்.  கண்காணிப்பாளரும், பாம்பினைப் பிடித்து தர வனத்துறைக்கு கடிதம் எழுத, அங்கு இருந்து ஒரு வாரம் கழித்து பதில் வந்தது.  "பாம்பினைப் பிடிக...

ஏழைகள் இல்லாத ஊரு

ஏழைகள் இல்லாத ஊரு    என்றும் பௌர்ணமியே!  காலையில் ஓலைக்குடிசையில் கஞ்சிக்கு ஏங்கும் குழந்தையின் கதறல் கேட்கும் உலகத்தில் காசுக்காரனா வாழ்வதே அவமானம் ஏ.சியில் தூங்குவதும் கேவலம். சாலையில் ஓரப் பாதையில் மாலை வரையும் கையேந்தி மடிப் பிச்சை வாங்கும் தாய்மார்கள் குடிசையில் வாழும் காலமே மனித குலத்துக்கே பெருமையே! புனிதம் என்று தெய்வத்தையே! பூமியில் ஏமாற்றும் பக்தர்கள். புண்ணியம் செய்து ஏழைகளை மண்ணில் வாழ வைப்பதே! புனிதன் என்கிறது தெய்வமே! தனக்கு தனக்கு தனக்கு என்று, நித்தமும் ஓடும் சுயநல வாழ்வு, மொத்தமும் இவ்வுலகில் பாரம். அடுத்தவன் சிரிப்பில் - நீங்கள் ஆண்டவனைக் கண்டு மகிழலாம். உண்டதை கக்கி கொடுக்காதே! உன்னால் முடிந்ததை கொடு. ஊரும் உலகமும் புகழா விட்டால் ஆண்டவனின் அன்பு இருக்கும். மாண்டாலும் உனக்கு உதவும். சமூகம் ஒரு விரிந்த வானம்  அதில் சாதிகள் நட்சத்திரங்களாகும். இனங்களும் வேதங்களும் - அங்கு சந்திரனும் சூரியனுமாகும். சூழ்ச்சிகள் இங்கு இருளாகும். ஆட்சியில் இருப்போரின் அகந்தை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பட்டினியில் வாடும் ஏழைகளுக்கு பசி போக்க உதவி விடு. ஆட்சி அதிகாரம் ஆண்டவ...

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு

#புகை பிடிப்பதினால் ஆண்களிடையே குறைந்த வயதிலேயே #இலிங்க #உயிர்ப்பின்மை ஏற்படக் காரணம் என்ன? ஆணின் இலிங்க உறுப்பின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தை எடுத்தால் அதன் உட்புறம் அனேகமாக corpora cavernosa எனப்படும் ஸ்பொன்ஜ் போன்ற படலத்தினால் ஆக்கப்பட்டதாகும். இலிங்க உயிர்ப்பு ஏற்படுவது இந்த ஸ்பொன்ஜ் படலத்தில் உயர்  அமுக்கத்துடன் குருதி நிரம்புவதனாலாகும்.  இப்படலம் குருதியினால் நிரப்பப்படுவது அங்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதி நாடி தடிப்படை (விரிவடை) வதனாலாகும். குருதி நாடி விரிவடைவது அதைச் சூழவும் உற்பத்தியாகும் NO (Nitric Oxide) எனும் இரசாயனத்திற்கு  தூண்டற்பேறைக் காட்டுவதனாலாகும். புகைபிடித்தலின் போது நுரையீரலினூடாக பரவும் இரசாயன கூறுகள் மூலமாக குருதி நாடியின் உட்புற சுவரில் ஏற்படும் பாதிப்பு காரணமாக நாடியைச் சூழவும் NO உற்பத்தி குறைவடைகிறது. இதனால் corpora cavernosa நிரம்புவதற்கு  தேவையானளவு குருதியைக் கொண்டு செல்வதற்கு குருதிநாடி போதியளவு விரிவடைவதில்லை. இலிங்க உறுப்பு உயிர்ப்பின்மை  ஏற்படுவது இதோ இவ்வாறுதான். புகை பிடிப்பதனால் குருதி கலன்களுக்கு படிப்படியாகவே ப...

கலைக்கப்பட்ட ஒருவரின் கனவு

#கலைக்கப்பட்ட_அஷ்ரஃபின்_கனவுகள் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் கலாநிதி MHMஅஸ்ரஃப் அவர்களின் 20 வது, நினைவு தினம் 2020:09:16 அன்று  ஞாபகப்படுத்தப்படும் வேளையில் அவரது ஒரு சில கனவுகளைப் பற்றி நினைவு படுத்தவே இப்பதிவாகும்,  #அஷ்ரஃப்_எனும்_ஆளுமை அஷ்ரஃப் அவர்கள் ஒரு அரசியல் தலைவராக எம்மால் அறியப்பட்டாலும் அவர் ஒரு சமூகப் போராளி, தனது இளவயது, குடும்பம், சமூக வாழ்க்கை பொருளாதாரம் என்பவற்றை சமூகத்திற்காக  அர்ப்பணித்த ஒரு தற்கொடைத் தலைவன்,  #சமூக_வழிகாட்டி,  தலைவர்கள் என்போர் தமது சமூகத்திற்கான வழிகாட்டல்களை தீர்க்கதரிசனமான முறையில் வழங்குபவர்களே ஆகும், மாறாக சமூகம் சிக்கலில் சிக்கிய பின்னர்,  ஓடி வந்து ஓப்பாரி வைப்போர் அல்ல,  அந்த வகையில் இலங்கையில் இனப்பிரச்சினை நிலவிய காலத்தில் சிறுபான்மைச் சமூகமான  தமிழர் சமூகத்துடன் இணைந்து ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட  முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயகத்தின் மீதும், தேர்தல்களிலும் நம்பிக்கை வைத்தவர்களாக  மாற்றி அரசியல் உரிமைப்  போராட்டத்தின் பக்கம் திசை திருப்பி  வைத்தவர்,  அஷ்ரஃப் அவர்களின...

மருத்துவமே மலிந்து போனது

மருத்துவ துறை நலிந்து போய் விட்டது  மலிந்து போய் விட்டது  மரியாதை இல்லை  முன்பைப் போன்று பொன் காய்க்கும் மரமாக இது இல்லை  கல்லடி பட வேண்டியிருக்கிறது  உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை  அதனால் மருத்துவம் படிக்க வராதீர்கள்  வேறு பல தொழில்கள் இருக்கின்றன  என்ற கூற்று மருத்துவர்களிடையேவும் பரவலாக பேசப்படுகிறது  இதிலிருந்தும் நான் மாறுபட விரும்புகிறேன்  இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விடவும் அரசு மருத்துவக்கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு.  இதன் விளைவாக ஆண்டுதோறும் 7400 மருத்துவர்கள் வெளிவருகிறார்கள்  இவர்களன்றி ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர்கள் சேர்த்து மொத்தம் 8000-10000 பேர் வருடந்தோறும் புதிதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்கின்றனர்  இங்கு ஒவ்வொரு 250 பேருக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறோம்.  நாட்டின் சராசரியை விடவும் பல மடங்கு அதிகமான மருத்துவர்கள் இங்குண்டு  சரி..அதனால் மருத்துவர்களுக்கு வேலையின்றிப் போய் விடும் நிலை வந்துவிடுமா? என்று கேட்டால்...

பெண்ணின் தியாகம்

கண்_கலங்க_வைத்த_பதிவு ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் வேதனையான உண்மை  பதிவு! அணைத்து ஆண் பெண் அணைவரும் படிங்க                     இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று  நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும் மீறி கடவுளிடம் மன்றாடி இருக்கிறேன். டெலிவரி(பிரசவ) அறையில் வலியால் துடிக்கும் பெண்களின் உணர்வை வேதனையை துடிப்பை யாராளும் விவரிக்க முடியாது அது ஒரு மறு பிறவிக்கான போராட்டம். இது தனது குழந்தைக்காக 9 மாதங்கள் அவர்கள் தாங்கியது. தமக்காக இதில் ஒரு நாளைக்கூட அவர்கள் செலவழித்ததில்லை.  இன்று நான் வேதனையுடன்  அழுதேன், ஏனெனில் நான் ஒரு பெண்மணியை (கர்ப்பிணியை) இழந்துவிட்டேன், இது போன்ற நேரங்களில் வாழ்க்கை வெறுத்துவிடுகிறது. கடவுள் வேறுமாதிரி முடிவு எடுத்துவிடுகிறான். தாங்க முடியவில்லை காரணம் இந்த பெண்ணின் கதை  மிகவும் வேதனையாக இருக்கிறது?...

சிறிய கதை தவறாமல் வாசிக்கவும்

எனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்...