என்னைக் கசிவு


கப்பல் தீப்பிடிப்பு; எண்ணெய் கசிவு அனர்த்தத்தை எப்படி எதிர்கொள்வோம்?


நமது கிழக்கு கடற்கரை தற்போது வரலாற்றில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது.


200,000 மெற்றிக் தொன்களுக்கு அதிகமான எண்ணெய் கடலோர நீரில் கலக்கும் சந்தர்ப்பத்தில் கடல், சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு  இருக்கும்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற ஜப்பானிய எண்ணெய் டேங்கர் மொரீஷியஸ் தீவுகளில் அருகே மூழ்கியதில் மொரிஷியஸ் கடற்கரையில் 1000-4000  தொன் எண்ணெய் வெளியேறியது.


வளர்ந்த நாடுகளைப் போல அந்த எண்ணெயை உறிஞ்சும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லாததால் கடல் நீரிலிருந்து எண்ணெயைப் பிரிக்க உள்ளூர் முறைகளைப் பயன்படுத்தினார்கள்.


மனித தலைமுடி (இது அதிக எண்ணெயை உறிஞ்சுகிறது), வைக்கோல் மற்றும் கரும்பு இழைகள், மீன் வலைகளில் வைக்கப்பட்டு கடல் மேற்பரப்பில் எண்ணெய் பரவுவதைத் தடுக்கவும், எண்ணெயை உறிஞ்சவும் நீண்ட கடற்பாசிகளையும் பயன்படுத்தினார்கள்.


அதனோடு மொரிஷியஸ் மீனவர்கள் தங்களது தலைமுடியை வெட்டி அதன் மூலம் இதற்கு பங்களித்தனர்.


ஏனென்றால் அவர்களின் முடியை விடவும் அவர்களது பிரதான  மீன்பிடி தொழில் அவர்களுக்கு முக்கியம். இருப்பினும் இரண்டு மாதங்கள் கடந்தும்  பிறகும் இன்னும் எண்ணெய் கசிவின் விளைவுகள் மொரீஷியஸ் கடற்கரையில் இருந்து  ஓயவில்லை.

தற்போது அந்த நாடு ஜப்பானிய கம்பனியிடம் 34 மில்லியன் டொலர் பணத்தை  இழப்பீடு தொகையாக கோரியுள்ளது.


நமது கிழக்கு கடற்கரையில் எரியும் பனாமா நாட்டிற்கு சொந்தமான இந்திய எண்ணெய் டேங்கரில் மொரீஷியஸ் சம்பவத்தை விடவும்  50 மடங்கு அதிகமான எண்ணெய் உள்ளது.


இன்னும் தீயினை கட்டுபடுத்த முடியவில்லை அப்படி பாரிய அனர்த்தம் நிகழும் சந்தர்ப்பத்தில் அந்த தாக்கம் கிழக்கு,வடக்கு, தென் பகுதி கடலில் பரவும். எண்ணெய் கரைக்கு வருவதற்கு முன்பு  கரைக்குச் சென்று இந்த மோசமான நிலையை எதிர்நோக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.


ருவன் விஜேமன்னே (சிங்களத்தில்)

பாறுக் நஜீ (தமிழ்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு