இதயத்தை பையில் சுமைக்கும் பெண்


இதயத்தை பையில் சுமக்கும் (இதயமில்லா) பெண். உண்மை என்ன?

இயந்திரம் 90 வினாடிகள் இயங்க மறுத்தால் உயிர் பிரியும் ஆபத்து.

Selva Hussain எனும் 39 வயதுடைய பெண் செயற்கை இதயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

2018 இல் நிகழ்ந்த சத்திர சிகிச்சை பற்றி சமீப நாட்களாக தமிழ் ஊடகங்களில் செய்திகளை காண கிடைக்கிறது. அதுபற்றிய விளக்கமான பதிவே இது.

தமிழில்: Dr Ziyad Aia

2 பிள்ளைகளின் தாயான Selwa Hussain பிரித்தானியாவில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபராகும். 

இதற்கு முன்னர் 2011 இல் 50 வயதுடைய ஒரு ஆண் Papworth Hospital, Cambridge இல் செயற்கை இதயம் பொருத்தப்பட்டார். 2 ஆண்டுகளின் பின்னர் அவருக்கு இதய மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை நலமாக வாழ்ந்து வருகிறார்.

எனவே Selwa Hussain தற்போது செயற்கை இதயத்துடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ஒரே நபர் என கொள்ளலாம்.

Selwa Hussain க்கு இந்த செயற்கை மாற்று சிகிச்சை இடம்பெற்றது 2017 இன் இறுதிப்பகுதியில். இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவரது வாழ்க்கையை புரட்டிப்போடும் அந்த வரலாறு ஆரம்பிக்கிறது.

Selwa Hussain அடிக்கடி கால் வீக்கங்களுக்கு உள்ளாகி ஒருநாள் திடீரென மூச்சு திணறலுக்கு ஆளானார். குடும்ப உறுப்பினர்கள் அவரை அவசரமாக அருகிலுள்ள Clayhal, Essex வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

4 நாட்களின் பின்னர் நிலைமை மோசமடையவே அவரை பிரபல Harefield Hospital க்கு கொண்டு சென்றனர். இறைவனின் அருளால் இயந்திரங்களின் உதவியுடன் உயிரை தக்க வைத்துக் கொண்டிருந்த அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது இதயம் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளதோடு அவருக்கு புதிய இதயத்தை மாற்றும் சத்திரசிகிச்சையை மேற் கொள்ளும் அளவுக்கு உடல் தகுந்த நிலையில் இருக்கவில்லை என்பதை அவருடைய கணவர் "Al" க்கு தெரியப்படுத்தினர்.

உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரே வழியாக செயற்கை இதயத்தை பொருத்த வண்டி இருப்பதாகவும் அதற்கு கணவரின் அனுமதி வேண்டி நின்றனர். அவரும் அனுமதிக்கவே பழுதடைந்த அவரது இதயம் நீக்கப்பட்டு செயற்கையான இதயம் பொருத்தப்பட்டது.

6 மணி நேர பிரயத்தனத்தில் பின் பொருத்தப்பட்ட இதயம் சிறப்பாக செயல்படுகிறது.

வைத்தியர்களின் கருத்துப்படி செல்வாவின் இரண்டாவது குழந்தை தரித்துப் பின் அவருடைய இதயத்தில் Cardiomayopathy என்ற நிலைமை உருவாகி Heart Failure க்கு இட்டு சென்றுள்ளது.

இந்த செயற்கை இருதயம் பொருத்தும் செயன்முறைக்கு 86000 Pounds செலவாக்கியது.

செயற்கை இருதயம் எப்படி செயற்படுகிறது?

இயற்கையான இதயம் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக இருதயத்தை ஒத்த அறைகளைக்கொண்ட Plastic பை அவரது நெஞ்சினுள் பொருத்தப்பட்டது.

உடலுக்கு வெளியே 15 இராத்தல் (6.8kg) நிறையுடைய Battery மற்றும் Motor கொண்ட பை (backpack) வெளியில் பொருத்தப்பட்டு அவற்றால் பிறப்பிக்கப்படும் காற்று 2 tube கள் வழியாக நெஞ்சுப் பகுதிக்கு செலுத்தப்பட்டு அந்த பிளாஸ்டிக் இதயம் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் உடலில் குருதிச் சுற்றோட்டம் நிகழ்கிறது.

( பிளாஸ்டிக் இதயம் செயற்படும் விளக்க படத்தை படத்தில் காண்க)

இந்த பிளாஸ்டிக் இதயம் நிமிடத்துக்கு 138 முறை துடிக்கும். வெளியிலிருந்து இயங்கும் மோட்டாரின் சத்தம் அதன் பாரம் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டே இந்தப் பெண் உயிர் வாழ்கிறார்.

அந்த பையில் இரண்டு Battery கள் உள்ளது. ஒன்று செயல் இழந்தாலும் இன்னும் ஒன்று Backup ஆக செயட்படும். அவருடன் எப்போதும் கணவர் or பாதுகாவலர் அருகில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்தால் 90 seconds களுக்குள் Back-up Machine உடன் இணைக்கப்பட வேண்டும்.

இவரின் நேர்காணலை 2018ல் பிபிசி வெளியிட்டது. தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது என்பதையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் பேசும் அந்தப் பெண்ணின் தைரியம் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இறைவன் எமக்கு தந்த அருட்கொடைகளை நினைத்து அவனுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு