இயல்பியால் ஆசிரியர் மற்றும் மாணவர் கதை
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”
பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.
"நிறுத்துவதற்கு"
“வேகத்தைக் குறைப்பதற்கு"
“மோதலைத் தவிர்ப்பதற்கு "
"மெதுவாக செல்வதற்கு"
"சராசரி வேகத்தில் செல்வதற்கு"
என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.
“வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.
ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.
பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.
இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.
உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.
இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.
வெற்றி நிச்சயம்👍
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later