ஏழைகள் இல்லாத ஊரு
ஏழைகள் இல்லாத ஊரு
என்றும் பௌர்ணமியே!
காலையில் ஓலைக்குடிசையில்
கஞ்சிக்கு ஏங்கும் குழந்தையின்
கதறல் கேட்கும் உலகத்தில்
காசுக்காரனா வாழ்வதே அவமானம்
ஏ.சியில் தூங்குவதும் கேவலம்.
சாலையில் ஓரப் பாதையில்
மாலை வரையும் கையேந்தி
மடிப் பிச்சை வாங்கும் தாய்மார்கள்
குடிசையில் வாழும் காலமே
மனித குலத்துக்கே பெருமையே!
புனிதம் என்று தெய்வத்தையே!
பூமியில் ஏமாற்றும் பக்தர்கள்.
புண்ணியம் செய்து ஏழைகளை
மண்ணில் வாழ வைப்பதே!
புனிதன் என்கிறது தெய்வமே!
தனக்கு தனக்கு தனக்கு என்று,
நித்தமும் ஓடும் சுயநல வாழ்வு,
மொத்தமும் இவ்வுலகில் பாரம்.
அடுத்தவன் சிரிப்பில் - நீங்கள்
ஆண்டவனைக் கண்டு மகிழலாம்.
உண்டதை கக்கி கொடுக்காதே!
உன்னால் முடிந்ததை கொடு.
ஊரும் உலகமும் புகழா விட்டால்
ஆண்டவனின் அன்பு இருக்கும்.
மாண்டாலும் உனக்கு உதவும்.
சமூகம் ஒரு விரிந்த வானம் அதில்
சாதிகள் நட்சத்திரங்களாகும்.
இனங்களும் வேதங்களும் - அங்கு
சந்திரனும் சூரியனுமாகும்.
சூழ்ச்சிகள் இங்கு இருளாகும்.
ஆட்சியில் இருப்போரின் அகந்தை
வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
பட்டினியில் வாடும் ஏழைகளுக்கு
பசி போக்க உதவி விடு.
ஆட்சி அதிகாரம் ஆண்டவன் தருவான்
உங்கள் ஐனி.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later