புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு
#புகை பிடிப்பதினால் ஆண்களிடையே குறைந்த வயதிலேயே #இலிங்க #உயிர்ப்பின்மை ஏற்படக் காரணம் என்ன?
ஆணின் இலிங்க உறுப்பின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தை எடுத்தால் அதன் உட்புறம் அனேகமாக corpora cavernosa எனப்படும் ஸ்பொன்ஜ் போன்ற படலத்தினால் ஆக்கப்பட்டதாகும்.
இலிங்க உயிர்ப்பு ஏற்படுவது இந்த ஸ்பொன்ஜ் படலத்தில் உயர் அமுக்கத்துடன் குருதி நிரம்புவதனாலாகும்.
இப்படலம் குருதியினால் நிரப்பப்படுவது அங்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதி நாடி தடிப்படை (விரிவடை) வதனாலாகும்.
குருதி நாடி விரிவடைவது அதைச் சூழவும் உற்பத்தியாகும் NO (Nitric Oxide) எனும் இரசாயனத்திற்கு தூண்டற்பேறைக் காட்டுவதனாலாகும்.
புகைபிடித்தலின் போது நுரையீரலினூடாக பரவும் இரசாயன கூறுகள் மூலமாக குருதி நாடியின் உட்புற சுவரில் ஏற்படும் பாதிப்பு காரணமாக நாடியைச் சூழவும் NO உற்பத்தி குறைவடைகிறது. இதனால் corpora cavernosa நிரம்புவதற்கு தேவையானளவு குருதியைக் கொண்டு செல்வதற்கு குருதிநாடி போதியளவு விரிவடைவதில்லை. இலிங்க உறுப்பு உயிர்ப்பின்மை ஏற்படுவது இதோ இவ்வாறுதான்.
புகை பிடிப்பதனால் குருதி கலன்களுக்கு படிப்படியாகவே பாதிப்பு ஏற்படும். வெளிப்படையாக அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் போது அனேகமாக மிக அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்க முடியும்.
இவ்வாறான நிலமை ஏற்படாது இருக்க செய்ய வேண்டியது புகை பிடித்தலில் இருந்து விலகி இருத்தல், புகை பிடிக்கும் இடத்தில் இருந்து தூரமாய் இருத்தல், மற்றும் புகை பிடிப்பவர்களாயின் இப்பழக்கத்தை உடனடியாக நிறுத்துதல்.
புகை பிடித்தலுக்கு அடிமைப் பட்டு இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முயற்சித்தல், அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்க முன் வருதல் எம் சகலரினதும் கடமையாகும்.
ஆதலால் புகைத்தலினால் கஷ்டப்படும் உங்கள் நண்பர்கள் இருப்பின் அல்லது உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பினும் அல்லது அது தொடர்பில் அவசியப்படும் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் 1999 சுவசெரிய ஆலோசனை சேவையுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் உங்களது இரகசிய தன்மையை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.
இது மட்டும் அன்றி உங்களது எத்தகைய சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் 24 மணி நேரமும் மும்மொழிகளிலும் செயற்படும் 1999 சுவசெரிய வைத்திய ஆலோசனை சேவை சுகாதார அமைச்சினால் இலவசமாக வழங்கப்படும் சேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later