இணையவழை குற்றங்கள்
இணையவழிக்குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இதோ சில தீர்வுகள் அண்மைக்காலமாக இணையவழிக் குற்றங்கள் பல கோணங்களிலும் பெருகிவரும் நிலையில், இதனால் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் உள ரீதியில் வெகுவாக பாதிப்புற்றுவருகின்றமை தொடர்கதையாக மாறியுள்ளது. இணையவழியே பகிடிவதைகள் கூட அதிகரித்திருப்பதும் சில நாட்களாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. இலங்கையில் இவ்வாறான இணையக்குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்று, அவற்றைப் பகுப்பாய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும் ஒரு செயல்திட்டமாக ஹிதவதீ திகழ்வதை பலருக்கும் தெரியப்படுத்தவே இந்தப்பதிவு. யார் எனக்கு உதவப் போகிறார்கள் ..? “எனக்கு சைபர் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது .. எனது மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டுள்ளது..அல்லது எனது புகைப்படம் ஒன்று திருத்தப்பட்டு ஆபாசப் படங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது அல்லது ஃபேஸ்புக்கில் வெளியிடப்படுகிறது… இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்?” இதுபோன்ற சம்பவத்தை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அல்லது இது உங்கள் நண்பர் ஒருவருக்கு அல்லது தெரிந்த ஒருவருக்கு நடந்திருக்கிறதா? “ஹிதவதீ” என்பது உங்கள் உதவி மேசை. அவர்கள் உங்க...