மான் கதை


_ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்.._

_அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.._

_அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.._

_இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.._

_அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.._

_மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன.._

_மான் தன் இடப்பக்கம் பார்த்தது.._

_அங்கே_ *ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்..*

மானின் வலப்பக்கம் *பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது..*

_ஒரு கருவுற்ற மான்.. பாவம் என்ன செய்யும்?_

_அதற்கு வலியும் வந்து விட்டது._
மேலும் எங்கோ *பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது..*

_*என்ன நடக்கும்?..*_

*மான் பிழைக்குமா?...*

_*மகவை ஈனுமா ?*_

*மகவும் பிழைக்குமா?...*

_*இல்லை.. காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?..*_

*_வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?.._*

*_புலியின் பசிக்கு உணவாகுமா?.._*

_பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும்,_
 _பொங்கும் காட்டாறு மறு புறம்,_
_பசியோடு புலியும்,_
_வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.._

_மான் என்ன செய்யும்?.._

*_மான் எதை பற்றியும் கவலை படாமல்.._* _*தன் கவனம் முழுவதையும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது..*_

_ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.._

*அப்போது நடந்த நிகழ்வுகள்..*

_*மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்..*_

*_அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது.._*

*_தீவிர மழை, காட்டுத் தீயை தீயை அணைத்தது.._*

_அந்த மான்,_
*அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது..*


வாழ்வின் பெரும் புயலில்,
பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்..
நாம் நம் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்..

*அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்..*

*கடவுள் தூங்குவதும் இல்லை..*

*நம்மை துயரப்படுத்துவதும் இல்லை..* 

*உன் செயலில் நீ கவனம் செலுத்து..*

*மற்றவை நடப்பதெல்லாம் நன்மையாக நடந்தே தீரும்..*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு