வெள்ளரிக்காய நன்மைகள்
வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு அறிந்தால் இதன் பலன்களை முழுமையாய் பெறுவோம். * கோடை என்றாலே உடலில் நீர் சத்து எளிதில் குறையும். இதனால் உடலின் கழிவுப்பொருள் வெளியேற்றத்தில் பிரச்சினை ஏற்படலாம் வெள்ளரியில் நார்சத்தும், நீர் சத்தும் அதிகம் என்பதால் இந்த பிரச்சினை இருக்காது. * வெள்ளரி சிறுநீரக பாதை பிரச்சினைகளை தீர்க்க உதவும். வெள்ளரி சாறு இருவேளை குடித்தால் போதும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்து விடும். சிறுநீரகத்தின் அழுத்தத்தினை குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாய் வைக்கும். * வெள்ளரிக்காய்க்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் இவைகளை நீக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் இதன் சாறு எடுத்துக் கொள்ள இப்பிரச்சினைகள் தீரும் ஜீரண சக்தி கூடும். * வெள்ளரி குடலிலுள்ள நாடா பூச்சிகளை நீக்கும். இதிலுள்ள எகிப்ஸின் என்ற...