உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே
சிறந்த சிறுகதை : வாசித்துத்தான் பாருங்களேன்!
“#உனக்கு_தகுதி_இல்லாத_இடத்தில்_நீ_இருக்காதே”
ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன்மகனை அழைத்து சொன்னார் , " மகனே , இது உனது பூட்டனின் கைக்கடிகாரம் , 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது , நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , இது பழையது என்பதால் 1000 ரூபா மட்டுமே தர முடியும் என்கின்றனர் , என்றான் .
தந்தை பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு , தந்தையிடம் இதற்கு 5000 ம் ரூபாதான் தர முடியும் என்கின்றனர் என்றான் .
தந்தை ‘இதனை நூதனசாலைக்கு ( Museum ) கொண்டு சென்று விலையை கேட்டுப்பார்’ என்றார் ... அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , நான் அங்கு போன போது , அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து , பரிசோதித்துவிட்டு , என்னிடம் இதற்கான பெறுமதி நூறு மில்லியன் என்கின்றனர் என்றான் ...
தந்தை மகனை பார்த்து , ‘மகனே ! சரியான இடம் தான் , உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும் . எனவே , பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு , உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார் .....’ உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான் ....
" " உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே ... ” இதனை நீ வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள் ....என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later