ஜகாத் எப்படி பிரிப்பது ஒரு குட்டி கதை
ஸகாத்
இதுவும் நடந்த சம்பவமே .
சவுதியில் என்னுடைய முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு 300 ஆடுகள் இருக்கும் .
வருடம் ஒரு முறை அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் .
அதை அப்படியே ஒரு ஏழையின் வீட்டில் இறக்கிவிடுவார் .. நானும் கூட செல்வேன் .
ஏன் ஒரே வீட்டிற்கு 20 ஆட்டையும் கொடுக்கிறாய் 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாமே 20 குடும்பம் உங்களை வாழ்த்துமே அல்லது அவர்கள் உங்கள் சொந்தமா மொத்தத்தையும் ஒரே வீட்டில் கொடுக்கிறாயே என கேட்டேன்
என் முதலாளி சொன்னார் நீ சொல்வது போல 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாம் அப்படி பிரித்துக் கொடுக்கும் ஒரு ஆட்டை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் நாளையே யாரிடமாவது விற்றுவிட்டு அடுத்த 2 நாளில் செலவு செய்து விடுவார்கள் .அப்புறம் நம்மையும் மறந்து விடுவார்கள் .. நம்முடைய நன்மையின் அளவும் அதோடு முடிந்து விடும்
அவர்களின் வறுமையும் ஒழியாது .
இப்ப நாம ஒரே வீட்டில் கொடுத்திருக்கோமே அந்த வீட்டில் அடுத்த சில வருடத்தில் வந்து பார் ஆடுகள் பண்ணையாயிருக்கும் அவர்கள் அந்த ஆடுகளை பார்க்கும்போதெல்லாம் நமக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள் அந்த ஆடுகளை கொண்டு அவர் வறுமையும் நீங்கிவிடும் அவரும் யாருக்காவது ஸகாத் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவார் .
அந்த ஆடுகளின் சந்ததிகள் அடுத்து அடுத்து ஸகாத் பொருளாக கை மாறிக்கொண்டே போகும் காலமெல்லாம் நமக்கு நன்மை வந்துக் கொண்டே இருக்கும் என சொன்னார் .
இன்றைக்கு நம் மக்களின் நிலைமையை எண்ணி பார்க்கிறேன் இருக்கிற 100 வீடுகளில் 20 வீடுகள் ஏழைகள் வாழும் வீடாக இருக்கும் .
அந்த 20 வீட்டிக்கும் என் முதலாளி செய்தது போல அன்றே யாராவது செய்திருந்தால் இன்று ஏழைகள் இல்லாத ஊராக மாறியிருக்கும் .
நாம் ஒவ்வொருவரும் ஸகாத் கொடுக்கிறோம் இல்லையென்று சொல்லவில்லை .
ஆனால் அதை நாம் எப்படி கொடுக்கிறோம் என்பதில் தான் சறுக்கி விடுகிறோம் .
ஸகாத் கொடுப்பவர்கள் சிந்தியுங்கள் .ஏழைகள் இல்லாத முஸ்லீம் மக்களை உருவாக்குவோம் .
(ப,பி)
இறைவன் திருமலையில்
கூறுகிறான்
❤ உங்களில் ஒருவரை விட
மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். செல்வத்தால் சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. #அல்லாஹ்வின் #அருட்கொடையையா #நிராகரிக்கிறார்கள்?
✍ அல்குர்ஆன் 16:71
❤ அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் ஷைத்தானின் நண்பர்கள்.
#யாருக்கு_ஷைத்தான் #நண்பனாக #ஆகி_விட்டானோ #அவனே_கெட்ட #நண்பன்.
✍அல்குர்ஆன் 4:38
❤ மனிதர்களின் #செல்வங்களைப் #பெருக்கிக்_கொள்வதற்காக நீங்கள் #வட்டிக்கு_கொடுப்பது #அல்லாஹ்விடம்_பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி #ஸகாத்_கொடுப்பீர்களானால் #இத்தகையோரே_பெருக்கிக் #கொண்டவர்கள்.
✍ அல்குர்ஆன் 30:39
❤❤❤தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம்
ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
✍ அல்குர்ஆன் 2:261
#தர்மம்_ஒருபோதும் #உங்கள் #செல்வத்தை #குறைக்காது
✍ நபி மொழி
எமது Helping hands srilanka WHATSAPP Groupல் இணைந்து கொள்ள விரும்புவர்கள் இந்த லிங்க் மூலம் இணைந்து கொள்ளலாம்
இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். ..
நீங்கள் பயனடைந்து போல் உங்கள் உறவுகளும் பயனடையட்டும்
மேலும் இணைப்பு 1, 2, 3,....40 என செல்வதால் ஒரு குழுமத்தில் இருப்பவர்கள் அடுத்த குழுமங்களில் இணைந்து கொள்வதை தவிர்ந்து கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later